புதிய பாதுகாப்புச் செயலாளர் நியமனம்!

Published By: Vishnu

29 Apr, 2019 | 03:58 PM
image

புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி சாந்த கோட்டேகொட  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 

கடந்த 21 ஆம் திகதி புனித உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற வெடிப்புச் சம்பவங்களை அடுத்து, பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர ஆகியோரை இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோரிக்கை விடுத்திருந்தார். இதனை அடுத்து பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தனது பதவியை இராஜினாமா செய்திருந்தார். இதனை அடுத்து புதிய பாதுகாப்பு செயலாளர் நியமிக்கப்படவிரிந்த நிலையில் புதிய பாதுகாப்பு செயலாளராக ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதி சாந்த கோட்டேகொட   நியமிக்கப்பட்டுள்ளார். 

அத்துடன் முன்னாள் பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்நிலையில் சட்டமா அதிபர் ஜயந்த ஜயசூரிய புதிய பிரதம நீதியரசராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால்  நியமிக்கப்பட்டிருந்தார் . அதற்கமைய அவரும் நேற்று  முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி  மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். மேலும், சொலிசிட்டர் ஜெனரல், ஜனாதிபதி சட்டத்தரணி தப்புல டி லிவேரா பதில் சட்டமா அதிபராகவும் மேலதிக கணக்காய்வாளர் நாயகம் சூலந்த விக்ரமரத்ன கணக்காய்வாளர் நாயகமாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்ரமரத்ன ஆகியோரும்  நேற்று  ஜனாதிப மைத்ரிபால சிறிசேனவிடம்  தமது நியமனக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டனர். சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சி.டீ. விக்ரமரத்ன, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04