"பைகளை எடுத்து வர வேண்டாம்..!” தமிழக தேவாலயங்களிலும் தடை உத்தரவு

Published By: Digital Desk 4

29 Apr, 2019 | 03:01 PM
image

’தேவாலயங்களுக்கு வரும் பக்தர்கள், தோள் பை உள்ளிட்ட பொருட்களை எடுத்து வர வேண்டாம்’ என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் தற்கொலை குண்டுத் தாக்குதல்கள் நடத்திய சந்தேக நபர்கள், தோளில் மாட்டியிருந்த பையில் வைத்தே குண்டை வெடிக்கச் செய்துள்ளனர். இதன் எதிரொலியாக, தமிழகத்தில் உள்ள தேவாலயங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

இதையடுத்து, தேவாலயங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் பாதிரியார்களுக்கு, பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக ஆலோசனைகளை பொலஸார் வழங்கி உள்ளனர். அத்துடன், தேவாலயங்களும் பாதுகாப்பில் தனி கவனம் செலுத்த வேண்டும் என்றும் பொலிஸார் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், தேவாலயங்களுக்கு வரும் பக்தர்கள் தோள் பை உள்ளிட்ட பொருட்களை உள்ளே கொண்டு செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேபோல், இரு சக்கரம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உள்ளே நிறுத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, சென்னை எழும்பூரில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் தேவாலயத்தின் செயலாளர் துலிப் தங்கசாமி, ஆலயத்தின் உறுப்பினர்களுக்கு அனுப்பியுள்ள குறுந்தகவலில், ‘எழும்பூர் பொலிஸார் வழங்கிய அறிவுரையின்படி, ஆலயத்துக்கு வரும் பக்தர்கள் (பைபிள், தண்ணீர் பொத்தல் தவிர்த்து) கைப்பைகள் உள்பட எந்த வித பைகளையும் எடுத்து வர வேண்டாம்.

ஆலயத்தின் பிரதான நுழைவு வாயில் வழியாக மட்டுமே உள்ளே வரவேண்டும். இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை உள்ளே நிறுத்த அனுமதி இல்லை. இந்த பாதுகாப்பு நடவடிக்கைகள், பொலிஸாரிடம் இருந்து மறு உத்தரவு வரும் வரை நடைமுறையில் இருக்கும்’ என கூறப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52
news-image

இந்தோனேசியாவில் வெடித்து சிதறும் எரிமலை ;...

2024-04-18 11:01:39
news-image

முன்னாள் ஜனாதிபதி டுடெர்டேவை சர்வதேச நீதிமன்றத்தில்...

2024-04-17 19:37:05
news-image

தமிழக தேர்தல் நிலவரம் - தந்தி...

2024-04-17 16:09:34
news-image

தமிழ்நாட்டில் அரசியல் தலைவர்களின் அனல் பறக்கும்...

2024-04-17 15:18:32
news-image

“என் பெயர் அரவிந்த் கேஜ்ரிவால்... நான்...

2024-04-17 12:10:07
news-image

இஸ்ரேலிய படையினர் ஆக்கிரமித்திருந்த அல்ஸிபா மருத்துவமனைக்குள்...

2024-04-17 11:44:07
news-image

உக்ரைன் யுத்தம் - ரஸ்யா இதுவரை...

2024-04-17 11:08:10