வெளிநாட்டுப் பிரஜைகள் 13 பேர் க‍ைது!

Published By: Vishnu

29 Apr, 2019 | 12:48 PM
image

(செ.தேன்மொழி)

கொழும்பை அண்டிய பகுதிகளான நவகமுவ, கல்கிஸ்ஸை, வெலிகட மற்றும் தெஹிவளை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 13 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலைமைகளின் காரணமாக பொலிஸார் மற்றும் பாதுகாப்பு படையினர் நடளாவிய ரீதியில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். 

அதற்கமைய கொழும்பை அண்டிய பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகளின் போதே குறித்த கைதுகள் இடம்பெற்றுள்ளன.

நாட்டின் குடிவரவு குடியகல்வு சட்டத்திற்கு புறம்பாக வீசாவின்றி தங்கியிருந்த பெண்ணொருவர் உட்பட 13 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் இந்திய பிரஜை உட்பட 6 நைஜீரிய பிரஜைகளும், நவகமுவ பகுதியில் ஈராக் நாட்டு பிரஜை ஒருவரும், வெலிகட பிரதேசத்தில் மேலும் நைஜீரிய பிரஜைகள் நால்வரும் தெஹிவளை பிரதேசத்தில் தாய்லாந்து பெண்ணொருவரும் உள்ளடங்களாக 13 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் 20 – 56 வயதுகளுக்கிடைப்பட்டவர்கள் என்பதுடன் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41