சாய்ந்தமருதில் நடந்தது என்ன?

Published By: Digital Desk 4

29 Apr, 2019 | 11:56 AM
image

உயிர் பறித்த ஞாயிறு நேற்­றுடன் ஒரு­வா­ர­ கா­லத்தை நிறை­வு­ செய்­துள்­ளது. அத­னி­டையே இடம்­பெற்­ற ­சம்­ப­வங்­களுள் சாய்ந்­த­ம­ருதுச் சம்­பவம் பலத்த கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

உயிர்த்­த ­ஞா­யிறு குண்­டு­வெ­டிப்­புச்­ சம்­ப­வங்­க­ளுக்கு உரி­மை­கொண்­டா­டிய அதே ஐ.எஸ். அமைப்­புத்­தான்தான் கல்­மு­னைச் ­சம்­ப­வத்­திற்கும் உரி­மை­கோ­ரி­யுள்­ளது.

கல்­மு­னைப் ­பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்ட சாய்ந்­த­ம­ருது பூர­ண­மாக முஸ்லிம் மக்­க­ளைக்­கொண்ட பிர­தே­ச­­மாகும். சுனா­மியில் பாதிக்­கப்­பட்ட சாய்ந்­த­ம­ரு­துக் ­கி­ராம கரை­யோ­ர­ மக்­க­ளுக்கு குடி­யேற்­றக்­கி­ரா­ம­மாக வொலி­வே­ரியன் என்­ற ­கி­ராமம் மேற்­கே­யுள்ள வயல்­ப­கு­தியில் உரு­வாக்­கப்­பட்­டது.

சாய்ந்­த­ம­ரு­தி­லி­ருந்து மேற்கே ஒரு தனி­யான பிர­தேசம் அது. அந்­தக்­ கி­ரா­மத்தில் சுமார் 200 முஸ்லிம் குடும்­பங்கள் வாழ்ந்­து­வந்­தன. அங்கு மைதா­னங்கள், இஸ்­லா­மி­யக்­கற்­கை ­நி­லையம் சுகா­தா­ர­ வைத்­தி­ய ­அ­தி­காரி அலு­வ­லகம் என்பன உள்­ளன. 

அங்கு குறித்த ஐ.எஸ். அமைப்­பினர் எவ்­வாறு வந்­தார்கள் என்­பது தொடர்பில் ஊட­கங்­களில் பல­த­க­வல்கள் வெளி­வந்­தன.

எவ்­வாறு குழு­வினர் வந்­தனர் ?

பிர­தா­ன­ குண்­டு­வெ­டிப்பின் சூத்­தி­ர­தாரி சஹ்­ரானின் சாரதி காத்­தான்­கு­டியில் கைது­செய்­யப்­பட்­ட­தைத் ­தொ­டர்ந்து பல தக­வல்கள் புல­னாய்­வுப் ­பி­ரி­வி­ன­ருக்கு தெரி­ய­வந்­தது. அத­ன­டிப்­ப­டையில் சம்­மாந்­து­றையில் செந்­நெல்­கி­ராமம் என்­ற ­இ­டத்தில் இனந்­தெ­ரி­யா­தோரின் பதுங்­கு­மி­ட­மி­ருப்­ப­தாகப் பொலி­ஸா­ருக்கு தகவல் கசிந்­தது.

சம்­மாந்­து­றைப் ­பொலிஸ் பிரி­வுக்­­குட்­பட்ட அப்­பி­ர­தே­சத்தை உடனே பொலிஸார், இரா­ணுவம் அதி­ர­டிப்­ ப­டை­யினர் ஆகியோர் முற்­று­கை­யிட்­டனர். வெள்­ளி­க்கிழமை மாலை இடம்­பெற்ற இத்­தே­டு­தலில் தற்­கொலை அங்­கி ­உள்­ளிட்ட பல­பொ­ருட்கள் கைப்­பற்­றப்­பட்­ட­துடன் 7பேரும் சந்­தே­கத்தில் கைதா­னார்கள்.

 அவர்கள் வழங்­கிய தக­வ­லை­ய­டுத்து நிந்­த­வூ­ரின் ­பக்கம் முப்­ப­டை­யினர் பார்வை திரும்­பி­யது. இதுவும் சம்­மாந்­து­றைப்­பொலிஸ் பிரி­வுக்­குட்­பட்­டது. அங்­கு­வந்­து­சென்ற படி ரக வாகனம்(சிறிய ரக வேன்) மக்­க­ளுக்கு சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது. படை­யினர் அதி­ரடி நட­வ­டிக்­கையில் இறங்­கி­யதும் அங்கும் பல வெடிக்­க­வைக்கும் பொருட்கள் கைப்­பற்­றப்­பட்­டன. ஆனால் படி வாகனம் தப்­பி­யது.

அவ்­வா­கனம் நேராக குறித்த சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரியன் கிரா­மத்­தினுள் நுழைந்­துள்­ளது. சம்­மாந்­துறை, நிந்­தவூர், சாய்ந்­த­ம­ருது ஆகிய 3 இடங்­க­ளிலும் குறித்த 3வீடு­க­ளுக்கும் தலா 50 ஆயிரம் ரூபா முற்­ப­ணமும் 5 ஆயிரம் ரூபா மாதாந்த வாட­கையும் தரு­வ­தாக காத்­தான்­கு­டி­யைச் ­சேர்ந்த மொகமட் நியாஸ் (1982 இல் பிறந்­தவர்) என்­ப­வரின் பெயரில் வாட­கைக்­குப்­பெ­றப்­பட்­டி­ருந்­த­தாக விசா­ர­ணை­க­ளி­லி­ருந்து தெரி­ய­வ­ரு­கி­றது.

தகவல் வெளியே வந்­தது எப்­படி?

சாய்ந்­த­ம­ருது வொலி­வே­ரி­யன்­ கி­ராம வீட் டில் 5பேர் தங்­கு­வ­தாக ஏலவே கூறப்­பட்­டதாம். ஆனால் சம்­ப­வ­தினம் சுமார் 19பேர் அளவில் மாலை­நே­ரத்தில் வந்­தி­றங்­கி­யது அங்­கி­ருந்த வீட்­டு­ரி­மை­யா­ள­ருக்கும்  ஏனைய குடி­யி­ருப்பு மக்­க­ளுக்கும் சந்­தே­கத்தை ஏற்­ப­டுத்­தி­யது.

இந்த விட­யத்தை அவர்கள் அங்­குள்ள பள்­ளி­வா­ச­லுக்கு அறி­வித்­தனர். பள்­ளி­வாசல் நிர்வா­கிகள் பிர­தேச கிரா­ம­ சேவை உத்­தி­யோ­கத்­த­ருக்கும் அறி­விக்­கப்­பட்­டது. அவர்கள் உட­ன­டி­யாக வந்து விசா­ரித்­த­வேளை வந்த குழு­வினர் சற்­று­கா­ர­சா­ர­மாக மறு­த­லித்து விவா­தித்­ததும் அவர்­க­ளுக்கும் சந்­தேகம் ஏற்­பட்­டது.

அவர்கள் திரும்பும் வழியில் வழ­மை­யாக பிர­தா­ன ­வீ­தியில் நிற்கும் பண்­டா­ர­வ­ளை­யைச்­சேர்ந்த அனை­வ­ரி­டமும் நன்­றா­கப் ­ப­ழ­கி­வரும் போக்­கு­வ­ரத்­துப் ­பொ­லி­ஸா­ரிடம் தெரி­வித்­துள்­ளனர்.

அவர் அங்கு சென்­ற­வேளை துப்­பாக்­கிப்­ பி­ர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்­ட­தா­கவும் அவர் மயி­ரி­ழையில் தப்­பி­ சி­ராய்ப்­புக்­கா­யங்­க­ளுடன் அரு­கி­லுள்ள கால்­வாய்க்குள் தப்­பி­வந்து பொலிஸா­ருக்கும் இரா­ணு­வத்­திற்கும் தக­வல் ­வ­ழங்­கினார்.

அதன்­பின்னர் தீவி­ர­வா­திகள் வெளி­யே­வந்து 5000 ரூபா காசுத்­தாளை வீசி­யெ­றிந்து 'அடே காட்­டிக்­கொ­டுத்­த­வ­னு­களே இந்தக் காசைச் சப்­புங்­கடா! உங்­க­ளுக்­கா­கத்தான் சாகிறோம் ' என்று கத்­தி­ய­தா­கக்­கூ­றப்­ப­டு­கி­றது. அத­னை­ய­டுத்தே சாய்ந்­த­ம­ருது தாக்­குதல் ஆரம்­ப­மா­கி­யது.

அந்­தக்­கணம்!

அதனை தொடர்ந்து அந்த இடத்தில் பதற்றம் ஏற்­பட்டு அப்­பி­ர­தேச மக்கள் ஒன்­று­கூட தொடங்­கி­னார்கள். அதன்­பின்பு மக்­களை கலைப்­ப­தற்­காக எடுத்த எந்த முயற்­சியும் கைகூ­டாத நிலை­யிலும் அங்­கி­ருந்து தங்­க­ளது வாக­னத்தில் தப்­பிச்­செல்ல முடி­யாத நிலையும் ஆயு­த­தா­ரி­க­ளுக்கு ஏற்­பட்­டது. பின்பு 'அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர்' என்று கூறிக்­கொண்டு வானத்தை நோக்கி ஆயு­த­தா­ரிகள் துப்­பாக்கிப் பிர­யோகம் செய்­தார்கள். துப்­பாக்கி சத்­தத்­தினால் ஊர்­மு­ழு­வதும் என்ன நடக்­கி­றது என்று தெரி­யாமல் மக்கள் குழம்­பிய நிலையில் பதற்றத்­து­ட­னும் ­அச்­சத்­து­டனும் காணப்­பட்­டார்கள். அதே­நேரம் இரா­ணு­வத்­தி­னர்கள் வரு­கை­தந்­த­துடன் கரை­வாகு பிர­தே­சத்தை சுற்­றி­வ­ளைத்­தார்கள்.

 

அப்­போது ஏற்­பட்ட பதற்றநிலை கார­ண­மாக அப்­பி­ர­தே­சத்தில் உள்ள மக்கள் அங்­கு­மிங்­கு­மாக தப்பி ஓடத்­தொ­டங்­கி­னார்கள்.

அப்­போது ஓர் முச்­சக்­கர வண்­டியில் சாய்ந்­த­ம­ருதைச் சேர்ந்த ஓர் குடும்­பத்­தினர் அவ்­வி­டத்­தி­லி­ருந்து பதற்றத்­துடன் வெளி­யேற முற்­பட்­ட­போது இரா­ணு­வத்­தி­னரின் துப்­பாக்கி ரவை­க­ளுக்கு இலக்­காகி மனைவி (பாத்­திமா அஸ்­ரிபா வயது 21) இறந்­த­துடன் முச்­சக்­கர வண்டி செலுத்தி வந்த கணவர் படு­கா­யத்­துடன் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.

தாக்­குதல் தொடர்ந்­தது!

 ஊர­டங்கு பிறப்­பிக்­கப்­பட்டு இத்­தாக்­குதல் வேட்டை ஆரம்­ப­மா­கி­யது. இர­வு­வே­ளை­யா­தலால் இக்­குண்­டு­வெ­டிப்­புச்­சத்­தங்­களும் துப்­பாக்­கி­வேட்­டுச்­சத்­தமும் நீண்­ட­தூ­ரத்­திற்­கு­கேட்­டது. என்­ன­ந­டக்­கி­றது என்­பது மக்­க­ளுக்கு அக்­கணம் தெரி­ய­வில்லை. இரு ஆயூத­தா­ரி­களும் ஒரு பெண்­சி­வி­லி­யனும் தாக்­கு­தலில் கொல்­லப்­பட்­ட­தாக மாத்­தி­ரமே அப்­போது ஊட­கங்­களில் சொல்­லப்­பட்­டது.

இந்த நேரத்தில் ஆயு­த­தா­ரிகள் தங்­கி­யி­ருந்த வீட்­டுக்குள் குண்டு ஒன்று வெடித்­தது. பின்பு சிறிது நேரத்தில் இன்­னு­மொரு குண்டு வெடித்­தது.

இந்த சந்­தர்ப்­பத்தில் பரஸ்­பர துப்­பாக்கி பிர­யோகம் நடத்­தப்­பட்­டது. இது பல மணி நேர­மாக நீடித்­தது. இரா­ணு­வத்­தி­னர்­களால் தாங்கள் சுற்றி வளைக்­கப்­பட்­டுள்ளோம் என்­ப­தனை அறிந்­ததும் வீட்­டுக்குள் இருந்த ஆயு­த­தா­ரிகள் முகநூல் மூல­மாக நேரடி ஒளி­ப­ரப்பு செய்­த­வாறு தங்­களை காபிர்கள் சுற்றி வளைத்­துள்­ளார்கள் என்று கூறிக்­கொண்டு தக்பீர் முழக்­கத்­துடன் குண்டை வெடிக்­க­வைத்து தற்­கொலை செய்­து­கொண்­ட­தாக அறி­யப்­ப­டு­கின்­றது.

ஆயு­த­தா­ரி­க­ளிடம் இரா­ணு­வத்­தி­னரை எதிர்த்து சண்டை செய்­வ­தற்­காக ஒரே ஒரு T56 ரக துப்­பாக்கி மட்­டுமே இருந்­துள்­ள­தா­கவும் மற்­ற­வைகள் குண்­டு­களும் அதனை தயா­ரிக்கும் உப­க­ர­ணங்­களும் என்றே அறிய முடி­கின்­றது.

இந்த தற்­கொலை குண்டு வெடிப்பு சம்­ப­வத்தில் ஆயு­த­தா­ரி­களைச் சேர்ந்த 13 பேர் கொல்­லப்­பட்­டார்கள். அதில் அவர்­க­ளது குழந்­தை­களும் பெண்­களும் அடங்கும். இரா­ணு­வத்­தி­னர்­களை எதிர்த்து சண்­டை­செய்த ஆயு­த­தா­ரி­களில் ஒருவர் துப்­பாக்­கி­யுடன் இறந்து கிடந்தார். 

இவர் தற்­கொலை செய்­த­தாக தெரி­ய­வில்லை. இவரின் தலையில் துப்­பாக்கி குண்­டுகள் துளைத்த நிலையில் அவ­ரது உடல் காணப்­பட்­டது. வீட்­டுக்குள் தற்­கொலை செய்து கொண்­ட­வர்­களின் உடல்கள் சிதைந்த நிலையில் கிடந்­தன.

வீட்­டுக்குள் எத்­தனை பேர் உள்­ளார்கள் என்ன நிலையில் உள்­ளார்கள் என்று தெரி­யாத நிலையில் இரா­ணு­வத்­தி­னர்கள் முன்­னெச்­ச­ரிக்­கை­யுடன் மிகவும் தாம­தித்தே அவ்­வீட்­டுக்குள் பிர­வே­சித்­தார்கள். அது­வ­ரைக்கும் துப்­பாக்­கி­பி­ர­யோகம் மேற்­கொண்­ட­ப­டியே முன்­னே­றி­னார்கள்.

துப்­பாக்­கி­தா­ரிகள் தப்­பிக்க நினைத்தால் மக்­களை கொலை செய்­து­விட்டு தப்­பித்­தி­ருக்­கலாம். ஆனால் மக்­க­ளுக்கு எதுவும் செய்­யாது தற்­கொலை செய்­து­கொண்­டார்கள் என்று சம்­ப­வத்தை நேரில் கண்ட அப்­பி­ர­தே­ச­வாசி தெரி­வித்தார்.

இதன்­போது குறித்த பயங்­க­ர­வா­தியின் தாக்­கு­தலில் இருந்து தப்­பிய குழந்­தையை இராணுவத்தினர் மீட்டு காப்­பாற்­றி ­யி­ருந்­தனர்.

தன்­னையும் குண்டு வைத்து கொல்­ல­மு­யன்­றது தனது தந்தை என்­பதை  அறி­யாத அந்த பிஞ்­சுக்­கு­ழந்தை எரி­கா­யங்­க­ளுடன் தனது தந்­தையை அழைக்கும் காட்சி பலரின் உள்­ளத்தை ஒரு கணம் உறை­யச்­செய்­த­துடன்  தாயாக தந்­தை­யாக குறித்த குழந்­தையை அர­வ­ணைத்து ஆறு­தல்­ப­டுத்தி காப்­பாற்­றிய இராணு வீரரின் மனி­த­நேயம் பலரின் கவ­னத்தை ஈர்த்­துள்­ளது.

இந்த சம்­ப­வத்தில் பொது­மக்கள் சிலரும் காய­ம­டைந்து அஸ்ரப் ஞாப­கார்த்த வைத்­தி­ய­சா­லையில் சிகிச்­சை­பெற்று வரு­கின்­றார்கள் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

துப்­பாக்கி மோதல் பதி­வாகி இருந்த கல்­முனை – சாய்ந்­த­ம­ருது பிர­தே­சத்தில் இருந்து 15 சட­லங்கள் மீட்­கப்­பட்­டுள்­ளன என்று காவற்றுறை ஊட­கப்­பேச்­சாளர்  பொலிஸ் அத்­தி­யட்­சகர் ருவன் குண­சே­கர தெரி­வித்­துள்ளார்.

6 ஆண்­களும் 3 பெண்­களும் 6 சிறார்­களும் இவ்­வாறு சட­லங்­க­ளாக மீட்­கப்­பட்­டுள்­ளனர்.

சம்­பவம் இடம்­பெற்ற பகு­தியில் உள்ள வீடொன்றில் இருந்த படு­கா­ய­ம­டைந்த பெண் ஒரு­வரும் குழந்தை ஒன்றும் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ள­தாக அவர் தெரி­வித்­துள்ளார்.

இந்த சம்­ப­வத்தில் பாது­காப்பு படை வீரர்­க­ளுக்கு எவ்­வித பாதிப்­புக்­களும் ஏற்­ப­ட­வில்லை என தெரி­வித்த அவர்  பர­வி­வரும் பொய்­யான தக­வல்­களை நம்­ப­வேண்டாம் என குறிப்­பிட்­டுள்ளார்.

மக்கள் பாட­சா­லையில் தஞ்சம்

சாய்ந்­த­ம­ருதில் இடம்­பெற்ற  தாக்­கு­தலால் அக­தி­க­ளாக பொலி­வே­ரியன் கிரா­மத்தில் சுமார் 1400 பொது­மக்கள் சாய்ந்­த­ம­ருது காரி­யப்பர் வித்­தி­யா­ல­யத்தில் தஞ்­ச­ம­டைந்­துள்­ளனர்.

இவர்­க­ளுக்­கு­ரிய பகல் உணவை சாய்ந்­த­ம­ருது ஜும்ஆப் பள்­ளி­வாசல் நிர்­வாகம் பொது­மக்­கள்­மூலம் ஏற்­பா­டு­செய்­தி­ருந்­த­தா­கவும்  மேலும் அவர்­க­ளுக்கு உத­வும்­பொ­ருட்டு பிஸ்கட்,கேக், தண்ணீர் போத்தல், குளிர்­பா­னங்கள், சிறு­வர்­க­ளுக்­கான உண­வு­களை சாய்ந்­த­ம­ருது ஜும்ஆப் பள்­ளி­வாசல் மற்றும் மாளி­கைக்­காடு சாலிஹீன் ஜும்ஆப் பள்­ளி­வாசல் என்­பன வழங்­கு­வ­தற்­கான  ஏற்­பா­டுகள் செய்­யப்­பட்­டி­ருந்­தன.

இரா­ஜாங்க அமைச்சர் ஹரீஸ், பாரா­ளு­மன்ற உறுப்­பினர் மன்சூர், கல்­முனை மாந­க­ர­மேயர் றக்கீப் மற்றும் மாந­க­ர ­சபை உறுப்­பி­னர்கள்  ஸ்தலத்­திற்கு விரைந்­தனர். ஊட­க­வி­ய­லா­ளர்­களும் செல்­ல­ அ­னு­ம­திக்­கப்­பட்­டனர். இவர்கள் பாட­சா­லையில் தங்­கி­யி­ருந்த மக்­களை    கண்டு ஆறு­தல்­தெ­ரி­வித்­தனர். அங்­கி­ருந்த இரா­ணு­வத்தின் கிழக்­கு ­மா­காண கட்­ட­ளைத்­த­ள­பதி அனு­ர­விடம் மக்­களின் பாது­காப்பை உறு­தி­செய்­யு­மாறு கேட்­டுக்­கொண்டனர்.

  இரா­ஜாங்க அமைச்சர் ஹரீஸ்­ அங்கு ஊட­கங்­க­ளுக்கு கருத்துத் தெரி­விக்­கையில்:

 தீவி­ர­வாத நட­வ­டிக்­கை­களை ஒரு­போதும் முஸ்­லிம்கள்  அனு­ம­திக்­க­மாட்­டார்கள். அத­னால்தான்  தீவி­ர­வா­திகள் சம்­பந்­த­மான தக­வல்­களை வழங்கி அவர்­களை பிடித்துக் கொடுப்­ப­தற்கு மக்கள் தயா­ராகி வரு­கின்­றனர் .

சாய்ந்­த­ம­ருதில் இடம்­பெற்ற சம்­பவமானது வெளி­ந­பர்கள் இங்கு வந்து வீடு­களை வாட­கைக்கு எடுத்து இங்கு இருந்­துள்ள பொழுது இங்­குள்ள மக்கள் பொலிஸாருக்கு கொடுத்த தகவலின் அடிப்படையில் அவர்கள் சுற்றி வளைத்த போதே இடம்பெற்றுள்ளது. 

குறிப்பாக தற்பொழுது பாதுகாப்பு படையினர் இங்கு அமையப்பெற்றுள்ள வீடுகளை  சோதனையிட்டு இவ்வாறான சம்பவத்திற்கு பொறுப்பான சூத்திரதாரிகள் பதுங்கி இருக்கின்றனரா? எனவும் தேடுதல் நடாத்தியிருந்தனர். குறித்த இடத்தில் வசித்துவந்த பொதுமக்கள் பாடசாலைக்கு கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தேவையான விடயங்கள் பல அரசியல்வாதிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பிரதி பொலிஸ்மா அதிபர் மற்றும் ஏனைய பொலிஸ் உயர் அதிகாரிகள் இச்சோதனை முடிந்த பிற்பாடு அவரவர் வீடுகளில் தங்க வைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும் என உறுதியளித்துள்ளனர். 

எனவே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டிய தேவையும் பொறுப்பும் அரசுக்கும் படையினருக்கும் இருக்கின்றது என்பதனை இவ்விடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என அவர் இதன் போது தெரிவித்தார்.

 வீடுகள் படையினரால் சோதனையிடப் பட்டபின்பு நேற்றுமுன்தினம் (27) சனிக்கிழமை மாலை 7மணியளவில் வீடு செல்லஅனுமதிக்கப்பட்டதாயினும் அவர்கள் அச்சம் காரணமாக நேற்றே வீடுகளுக்குச் சென்றனர் என்று கூறப்படுகிறது.

ஊரடங்குச்சட்டம் ஒன்றரை நாட்களின்பின்பு நேற்று 10 மணியளவில் விலக்கிக்கொள்ளப்பட்டது.எனினும் மாலை 5 மணிக்கு மீண்டும் அமுலுக்குவந்தது.

தற்போது படிப்படியாக மக்கள் இயல்புவாழ்க்கைக்கு திரும்பிக்கொண்டிருப்பினும் அச்சம் பீதி அவர்களைவிட்டு இன்னும் நீங்கவில்லையென்பதே உண்மை.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13
news-image

மறுமலர்ச்சியை ஏற்படுத்த வணிக மறுமலர்ச்சி அலகு

2024-04-15 18:55:41
news-image

ரோஹிங்யா முஸ்லிம்களின் உதவியை நாடும் மியன்மார்...

2024-04-15 18:51:43
news-image

சிறிய அயல் நாடுகளின் சோதனைக் காலம்?

2024-04-15 18:49:22