ஐ.பி.எல்.லில் இன்று இரு ஆட்டங்கள்!

Published By: Vishnu

28 Apr, 2019 | 12:01 PM
image

12 ஆவது ஐ.பி.எல். தொடரில் இன்றைய தினம் இரு போட்டிகள் இடம்பெறவுள்ளது. 

அதன்படி 46 ஆவது லீக் ஆட்டம் விராட் கோலி தலைமையிலான ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் ஸ்ரேயஸ் அய்யர் தலைமைலோன டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையில் இன்று மாலை 4.00 மணிக்கு டெல்லியிலும், 47 ஆவது லீக் போட்டி தினேஷ் கார்த்திக் தல‍ைமையிலான கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் மற்றும் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணிகளுக்கிடையில் இன்றிரவு 8.00 மணிக்கு கொல்கத்தாவிலும் இடம்பெறவுள்ளது.

இந்த ஆண்டில் வியப்புக்குரிய வகையில் விளையாடி வரும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 11 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. எஞ்சிய 3 ஆட்டங்களில் ஒன்றில் வெற்றி பெற்றாலேயே அடுத்த சுற்று வாய்ப்பு உறுதியாகி விடும். 

முதல் 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோல்வி அடைந்த பெங்களூரு அணி அடுத்த 5 ஆட்டங்களில் நான்கில் வெற்றிக்கனியை பறித்து எழுச்சி பெற்றிருப்பதுடன் அடுத்த சுற்று வாய்ப்பிலும் நீடிக்கிறது.

இந்த அணிக்கு எஞ்சிய மூன்று போட்டிகளிலும் வெற்றியீட்டியானால் மாத்திரம் அடுத்து சுற்றுக்குள் நுழையும்.

இவ்விரு அணிகளும் ஏற்கனவே சந்தித்த ஆட்டத்தில் டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

மூன்று முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 7 வெற்றி, 4 தோல்வியுடன் 14 புள்ளிகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது.

இன்றைய ஆட்டத்திலும் வெற்றி பெற்றால் மும்பை அணி அடுத்த சுற்றில் நுழைவது உறுதி செய்யப்பட்டு விடும். 

முன்னாள் சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 வெற்றி, 7 தோல்வி என்று 8 புள்ளிகளுடன் பின்தங்கியுள்ளது. இதில் கடைசியாக ஆடிய 6 ஆட்டங்களில் தொடர்ச்சியாக தோற்று இருப்பதால் அந்த அணி வீரர்களின் நம்பிக்கை மனரீதியாக சீர்குலைந்துள்ளது. 

கடந்த 5 ஆட்டங்களை எடுத்துக் கொண்டால், ஒவ்வொரு முறையும் குறைந்தது 160 ஓட்டங்களுக்கு மேல் எடுத்திருக்கிறார்கள். ஆனால் பந்து வீச்சாளர்கள் தவறி விடுகிறார்கள். அந்த அணிக்கு இன்னும் 3 லீக் ஆட்டங்களே உள்ளன. இவை அனைத்திலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பை பற்றி சிந்தித்து பார்க்க முடியும். ஒன்றில் தோற்றாலும் வெளியேறிவிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் சித்திரை வசந்த கால கொண்டாட்டம்...

2024-04-16 17:38:49
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்படும்

2024-04-16 12:43:21
news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46