மஹிந்தவின் பெயரிலும் வீட்டுத் திட்டம்

Published By: MD.Lucias

23 Apr, 2016 | 10:58 AM
image

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட அனைத்து நாட்டு தலைவர்களின் பெயரிலும் வீட்டுத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு புதிய கிராமங்கள் உருவாக்கப்படும் என வீடமைப்பு மற்றும் நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

ரணசிங்க பிரேமதாஸவினால் தோற்றுவிக்கப்பட்ட கம்உதாவ வேலைத்திட்டத்தின் கீழ் இரண்டு தசாப்தங்களின் பின்னர் இரண்டாவது கம் உதாவ வீட்டு திட்டம் திறந்து வைக்கப்பட்டபோது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

பத்தரமுல்லை செத்சிறிபாய கட்டட தொகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அமைச்சர் சஜித் பிரேமதாஸ குறிப்பிடுகையில்,

முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவினால் வறுமை கோட்டின் கீழ் வாழும் அப்பாவி மக்களுக்கான கம் உதாவ வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இதனூடாக பத்து இலட்சம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன.

இதன்மூலமாக பல்வேறு ஏழை குடும்பங்களுக்கு வாழ்வளிக்கப்பட்டன. இந்நிலையில் கடந்த ஆட்சியின் போது இவ்வாறான வேலைத்திட்டங்கள் முன் னெடுக்கப்படவில்லை. இதன்படி புதிய ஆட்சி மலர்ந்த பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் ஆலோசனையின் பெயரில் கம் உதாவ திட்டம் மீளவும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. அதேபோன்று வீடமைப்பு திட்டத்திற்கு உரிய வகையில் அவதானம் செலுத்தப்பட்டு வருகின்றது.இதன்பிரகாரம் முன்னாள் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸவின் வேலைத்திட்டமான கம் உதாவ திட்டம் இரண்டு தசாப்தங்களின் பின்னர் முதலாவதாக அண்மையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் திறந்து வைக்கப்பட்டது. இதன்படி இரண்டாவது திட்டமாக அம்பாந்தோட்டை , லுணுவெஹர பிரதேசத்தில் 53 குடும்பங்களுக்கு வீட்டு திட்ட கிராமம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இக்கிராமத்திற்கு சஹனகம என்று பெயரிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை எதிர்வரும் காலங்களில் பல்வேறு வீட்டுத்திட்டங்களை ஆரம்பிக்க வுள்ளோம். இதன்படி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ உள்ளிட்ட அனைத்து நாட்டு தலைவர்களின் பெயரிலும் வீட்டு திட்டம் ஆரம்பிக்கப் பட்டு புதிய கிராமங்கள் உருவாக்கப்படும்.

இதன் போது அரசியல் பேதங்கள் பார்க்கப்பட மாட்டாது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

பாலித தெவப்பெருமவின் பூத உடல் நல்லடக்கம்

2024-04-20 00:06:17