தற்கொலை தாக்குதல் குறித்து பிரதமர் தெரிவித்துள்ள அதிர்ச்சி தகவல் என்ன?

Published By: Rajeeban

27 Apr, 2019 | 12:13 PM
image

இலங்கையில் உயிர்த்தஞாயிறு தினத்தில் தாக்குதலை மேற்கொண்டவர்கள் தங்களை பின்பற்றி மேலும் பலர் தாக்குதல்களை மேற்கொள்ளமுன்வருவார்கள் என எதிர்பார்த்திருக்ககூடும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கார்டியனிற்கு தெரிவித்துள்ளார்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை மேற்கொண்டவர்கள் ஏன் பெருமளவு  வெடிபொருட்களை பயன்படுத்தாமல் விட்டு சென்றார்கள் என்ற கோணத்தில்  விசாரணைகள்  இடம்பெறுவதாக பிரதமர் தெரிவித்துள்ளார்

 மேலும் பலர் தங்களை பின்பற்றி தாக்குதலை மேற்கொள்ள முன்வருவார்கள் என்ற எதிர்பார்ப்பில் வெடிபொருட்களை பயன்படுத்தாமல் விட்டுவைத்திருந்தார்களா என ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்

உயிர்த்தஞாயிறு தாக்குதல்  மேலும் பல முஸ்லீம்களை தாக்குதல்களை மேற்கொள்ள தூண்டும் என  அவர்கள் எதிர்பார்த்திருக்கலாம் அவ்வாறு  இரண்டாவது  சுற்று தாக்குதல்களை மேற்கொள்பவர்களிற்கு வெடிமருந்துகள் அவசியம் என அவர்கள் கருதியிருக்கலாம் எனவும் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசாரணையாளர்கள் 140 ஆதரவாளர்களையும் அனுதாபிகளையும் இனம் கண்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ள பிரதமர் இவர்களில் அரைவாசி;க்கும் மேற்பட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் சிலர் தப்பியோடியவண்ணமுள்ளனர் இவர்கள் தற்கொலை தாக்குதலை மேற்கொள்ளும் திறமையுள்ளவர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்

தற்கொலை தாக்குதல்களை மேற்கொள்ள கூடிய மேலும் பலரை ஈர்க்கும் முயற்சிகள் இடம்பெறலாம் எனகருதுவதாகவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்

வெடிபொருட்களை பயன்படுத்துவது குறித்த பாரிய திட்டமொன்று உள்ளது என்ற சந்தேகம் காணப்படுவதாக தெரிவித்துள்ள அவர் எதிர்காலத்தில் யாரை கொண்டுவரப்போகின்றார்கள் என்பதே கேள்வி எனவும் தெரிவித்துள்ளார்.

  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08