காலநிலையில் மாற்றம் ; பொது மக்களுக்கு எச்சரிக்கை!

Published By: Vishnu

26 Apr, 2019 | 06:29 PM
image

இலங்கைக்கு 1000 கிலோ மீற்றர் அப்பாலான பிரதேசத்தில் உயர்நிலை உருவாகி வருவதாகவும் இந்த நிலைமையுடன் இம்மாதம் 28 29 ஆம் திகதிகள் மற்றும் மே மாதம் முதலாம் திகதி வரையில் இந்த சீரற்ற வானிலை நிலவுவதுடன் 100 தொடக்கம் 150 மில்லிமீற்றர் மலைவீழ்ச்சி பதிவாகப்படும் என அரச நிர்வாகம் மற்றும் இடர் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார விளக்கம் அளித்தார். 

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்காக உருவாகிய ஒரு குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒரு தாழமுக்கமாக விருத்தியடைந்துள்ளது.

இது தொடர்பில் இடர் முகாமைத்துவ அமைச்சு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகளை தெளிவுப்படுத்தும் செய்தியாளர் மகாநாடு இன்று இந்த அமைச்சில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், 

கடும் காற்றும் வீசக்கூடும் என்பதால் கடற்தொழிலாளர்களுக்கு பெரும் தாக்கம் ஏற்படும் என்றும் இதனால் இந்த காலப்பகுதியில் கடலுக்கு செல்வதை தவிர்த்து கொள்ளவும்.

அவசரநிலை ஏற்படும் பட்சத்தில் அதனை எதிர்கொள்வதற்கு அனைத்து பிரிவுகளும் தயார் நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

இந்த செய்தியாளர் மகாநாட்டில் கலந்துக்கொண்ட வளிமண்டவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அத்துல கருணாநாயக்க கருத்து தெரிவிக்கையில்,

இந்த நிலையில் மாற்றம் ஏற்படக்கூடிய நிலை உண்டு பொதுவாக மாலை வேளையில் ஏற்படும் மழையுடன் காலநிலை இன்றும் நாளையும் நிலவுவதுடன் 27, 28, 30 ஆம் திகதிகளில் இந்த நிலையில் மாற்றம் ஏற்படக்கூடிய வாய்ப்பும் இருப்பதாக பணிப்பாளர் கூறினார்.

இதற்கு முக்கிய காரணம் நாட்டில் 1200 கிலோமீற்றருக்கு அப்பால் கிழக்கு திசையில் பொத்துவில் பிரதேசத்துக்கு அருகாமையில் குறைந்த தாழமுக்க நிலை உருவாகுவதே ஆகும். இது எதிர்வரும் சில தினங்களில் குறைந்த தாழமுக்க நிலையாக மாற்றமடையக்கூடும் என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 11:50:02
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22
news-image

நான்கு ரயில் சேவைகள் இரத்து!

2024-04-19 10:50:08
news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39