தற்கொலை தாக்குதல்களுடன் விடுதலைப்புலிகளிற்கு தொடர்புள்ளதா- ரணிலின் பதில் என்ன?

Published By: Rajeeban

26 Apr, 2019 | 04:39 PM
image

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையில் இடம்பெற்ற தாக்குதல்களிற்கு விடுதலைப்புலிகளிற்கு தொடர்பில்லை என  தெரிவித்துள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தாக்குதல்களுடன் தொடர்புபட்டவர்களை கண்டுபிடித்து நடவடிக்கை எடுப்பதற்காக பாக்கிஸ்தானின் உதவியை கோருவதற்கு தயார் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்துஸ்தான் டைம்ஸின் பத்மா ராவ் சுந்தர்ஜி;க்கு வழங்கியுள்ள பேட்டியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளதாவது

நாங்கள் வெளிநாட்டு தொடர்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டுவரும் அதேவேளை எந்த உலக நாடும்  இலங்கையில் தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளிற்கு ஆதரவளித்தன என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

பிராந்தியத்தின் அனைத்து நாடுகளும் பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்கொள்கின்றன.

சர்வதேச பயங்கரவாதம் எங்கள் நாட்டிற்குள் பரவுவதை தடுப்பதற்கான  முயற்சிகளில் இந்தியா ஈடுபட்டுள்ளது.

நாங்கள் மீண்டும் மீண்டும் அனுபவித்துள்ளதை போன்று சிறந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் ஈவிரக்கமற்ற பயங்கரவாதிகளால்  முறியடிக்க முடியும்.

எங்கள் புலனாய்வு பிரிவினர் சர்வதேச சகாக்களுடன் இணைந்து பணியாற்றியுள்ளனர்.

இலங்கையில் சர்வதேச பயங்கரவாதம் தாக்குதலை மேற்கொண்டுள்ளமை இதுவே முதல்தடவை. இது புதிய அனுபவம் நாங்கள் குற்றவாளிகளை கைதுசெய்வதற்காக  எங்கள் சர்வதேச சகாக்களுடன் இணைந்து செயற்படுவோம்.

இலங்கையின் பயங்கரவாதத்திற்கு எதிரான போரிற்கு பாக்கிஸ்தான் முழுமையான ஆதரவை வழங்கியுள்ளது.

தேவைப்பட்டால் பயங்கரவாதிகளை கண்டுபிடித்து அழிப்பதற்கு பாக்கிஸ்தானின் உதவியை நாங்கள் கோருவோம்.

இந்த துயரமான சம்பவம் எங்கள் நாடுகளிற்கு இடையில் உள்ள ஒத்துழப்பை மேலும் அதிகரிக்கும் என நான் கருதுகின்றேன்.

விடுதலைப்புலிகளிற்கு தொடர்பில்லை

தற்கொலை குண்டுதாக்குதல்கள் தற்போது விடுதலைப்புலிகள் மாத்திரம் பயன்படுத்துபவையல்ல.

விடுதலைப்புலிகளின் தற்கொலைதாக்குதல்களால் பல சர்வதேச அமைப்புகள் கவரப்பட்டன அந்த ஈவிரக்கமற்ற முறையை பயன்படுத்தின

இதன் காரணமாக இந்த தாக்குதல்களிற்கும் விடுதலைப்புலிகளிற்கும் தொடர்பிருக்கலாம் என்பதை நாங்கள் நிராகரிக்கும் அதேவேளை விடுதலைப்புலிகளை தோற்கடிப்பதில் எங்கள் பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த அனுபவத்தை இந்த அச்சுறுத்தல்களை ஒழிப்பதற்கு நாங்கள் பயன்படுத்தலாம்.

2012 முதல் 2014 வரை முஸ்லீம்கள் இலங்கையில் அழுத்தத்திற்கு உள்ளாகினர்.

2015  2015 ற்கு பின்னர் இந்த நிலையில் மாற்றமேற்பட்டுள்ளது.. முஸ்லீம் எதிர்ப்பு தலைதூக்குவதற்கு நாங்கள் அனுபவிக்கவில்லை.

கண்டியில் மாத்திரம் துரதிஸ்டவசமாக ஒரு சம்பவம் இடம்பெற்றது, இதனை நாங்கள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தோம்.

இதேவேளை எங்கள் பிராந்தியத்திலும் தாராளவாத நாடுகளிலும் பரவும்  முஸ்லீம் எதிர்ப்பலைகள்  இலங்கையிலும் தாக்கத்தை செலுத்தியுள்ளன.

ஒரு இலங்கைக்குள் சகவாழ்வு வாழும் அனைத்து சமூகத்தினருக்கும் அரசமைப்பு உத்தரவாதத்தை நாங்கள் வழங்கவேண்டும்

30 வருட மோதல் என்பது பெருமளவிற்கு உள்நாட்டு விடயம்,சிலவேளைகளில் அது இந்தியா வரை சென்றது.

யுத்தம் முடிவடைந்த பின்னர் பயங்கரவாதத்திற்கு அடிப்படை;யான காரணங்களிற்கு தீர்வை காணவேண்டிய தேவை காணப்பட்டது.

நல்லிணக்க நடவடிக்கைகள் துரிதமாக இடம்பெறும்அதேவேளை எங்கள் அரசாங்கம் இனங்கள் மதங்களின்    உரிமைகளிற்கான அரசமைப்பு உத்தரவாதம் குறித்து குரல்கொடுத்துள்ளது .

இலங்கை குறிப்பிடதக்க  அமைதியை அனுபவித்த அதேவேளை கடந்த தசாப்தத்தில் சர்வதேச பயங்கரவாதத்தில் எதிர்பாரத மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.

எங்கள் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ள வெளிநாட்டு சக்திகளை நாங்கள் கண்காணிக்கவேண்டியுள்ளது

உயிர்த்தஞாயிறை தாக்குதலிற்காக பயங்கரவாதிகள் தெரிவு செய்தது சர்வதேசத்தின் கவனத்தை அவர்கள் பெற முயன்றுள்ளதை புலப்படுத்தியுள்ளது

பிராந்திய சர்வதேச சக்திகளால் தீவிரவாதமயப்படுத்தப்படும் உள்ளுர் குழுக்களிற்கு எதிராக நாங்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைபொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:18:08
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49