எதிர்வரும் ஆண்டில் இருந்து பாடசாலை சீருடைகளை மீண்டும் பழைய முறையின் கீழ் விநியோகிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு இலங்கை ஆசிரியர் சங்கம் ஜனாதிபதியிடம் கோரிக்கை ஒன்றை முன்வைக்கும் முகமாக கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளது. 

2017 ஆம் ஆண்டில் வவுச்சருக்குப் பதிலாக சீருடைத் துணியை விநியோகிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதியிடம் கடிதம் மூலம் கோரியதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்தார்.