ஊரடங்கு தொடர்ந்தால் மட்டு-கொழும்பு ,இரவு நேர ரயில் சேவை  இடம்பெறாது 

Published By: Digital Desk 4

25 Apr, 2019 | 11:11 PM
image

பொலிஸ் ஊரடங்கு தொடர்ந்தால் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி இடம்பெறும் மாலை மற்றும் இரவு நேர ரயில்கள் இடம்பெறாது எனவும் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்படாத தினங்களில் மாலை மற்றும் இரவு நேர ரயில் சேவையில் ஈடுபடும் எனவும் மட்டக்களப்பு ரயில்வே நிலையத்தின் பிரதான ரயில் நிலைய அதிபர் சின்னத்தம்பி சுவேதகுமாரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி இடம்பெறும் ரயில்  தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கும் கொழும்பிலிருந்து மட்டக்களப்புக்கும் காலை மற்றும் மாலை,இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடும் மூன்று ரயில்களில் காலையில் சேவையில் ஈடுபடும் ஒரு ரயில் மாத்திரம் தற்போது சேவையில் ஈடுபடுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை காலை 11.00 மணிக்கு மட்டக்களப்பிலிருந்து மாகோ சந்திக்கு ஒரு ரயில் சேவையில் ஈடுபடுவதுடன்,இரவு நேர எரிபொருள் ரயில் இன்னும் சேவையில் ஈடுபடவில்லை.

அத்தோடு மட்டக்களப்பு மற்றும் காத்தான்குடி பிரதேசங்களிலிருந்து கொழும்பு நோக்கி இரவு நேரங்களில் சேவையில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்து சபை பஸ்களும்,தனியார் பஸ்களும் காலை நேரங்களில் சேவையில் ஈடுபடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33