கொல்கத்தாவின் நிலைமையை மாற்றினார் தினேஷ் கார்த்திக்

25 Apr, 2019 | 09:55 PM
image

ராஜஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தினேஷ் கார்த்திக்கின் நிலையான ஆட்டத்தினால் கொல்கத்தா அணி 175 ஓட்டங்களை குவித்துள்ளது.

12 ஆவது ஐ.பி.எல். தொடரின் 43 ஆவது லீக் போட்டி கொல்கத்தா கினைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகளுக்கிடையே கொல்கத்தாவில் இன்றிரவு 8.00 மணிக்கு ஆர்பமானது.

இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பை தேர்வுசெய்துள்ள நிலையில் கொல்கத்தா அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அந்த அணி சார்பில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக கிறிஸ் லின் மற்றும் சுப்மான் கில் ஆகியோர் களமிறங்கி துடுப்பெடுத்தாட முதல் ஓவரின் மூன்றாவது பந்து வீச்சில் கிறிஸ் லின் எதுவித ஓட்டமுமின்றி வருண் ஆரோனுடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்து வெளியேற, சுப்மான் கில்லும், நான்காவது ஓவரின் இறுதிப் பந்து வீச்சில் 14 ஓட்டத்துடன் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து களமிறங்கிய நிட்டிஸ் ரான 21 ஓட்டத்துடனும், சுனில் நரேன் 11 ஓட்டத்துடன் ஆட்டமிழந்து ஆடுகளம் விட்டு வெளியேற கெல்கத்தா அணி 11.3 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 80 ஓட்டங்களை பெற்றது.

இதன் பின்னர் 5 ஆவது விக்கெட்டுக்காக அணித் தலைவர் தினேஷ் கார்திக் மற்றும் ரஸல் ஜோடி சேர்ந்து துடுப்பெடுத்தாட ஆரம்பிக்க கொல்கத்தா அணி 15 ஓவர்களின் முடிவில் 100 ஓட்டங்களை பெற்றது. தினேஷ் கார்த்திக் 42 ஓட்டத்துடனும், ரஸல் 4 ஓட்டத்துடனும் ஆடுகளத்தில் இருந்தனர்.

இந் நிலையில் 16 ஆவது ஓவரின் 2 ஆவது பந்து வீச்சில் தினேஷ் கார்த்திக் அரைசதம் கடக்க, ரஸல் 14 ஓட்டத்துடன் 16 ஆவது ஓவரின் 5 ஆவது பந்தில் ஆட்டமிழக்க அடுத்து வந்த பிரித்வெய்ட்டும் 4 ஓட்டத்துடன் வெளியேறினார்.

இறுதியாக கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 6 விக்கெட்டுக்களை இழந்த நிலையில் 175 ஓட்டங்களை குவித்தது. ஆடுகளத்தில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிய தினேஷ் கார்த்திக் 50 பந்துகளில் 9 ஆறு ஓட்டம், 7 நான்கு ஓட்டம் அடங்களாக 97 ஓட்டத்துடனும், ரிங்கு சிங் 3 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் ராஜஸ்தான் அணி சார்பில் வருண் ஆரோன் 2 விக்கெட்டுக்களையும், உஷேன் தோமஸ், ஸ்ரேயஸ் கோபால் மற்றும் உனாட்கட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதன் மூலம் ராஜஸ்தான் அணிக்கு வெற்றியிலக்காக 176 ஓட்டம் நிர்ணயிக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22
news-image

டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில்...

2024-04-13 07:02:37