கொழும்பில் பொலிசாரும் முப்படையினரும் கடும் சோதனை

Published By: Digital Desk 4

25 Apr, 2019 | 06:07 PM
image

(ஆர்விதுஷா)

தலைநகர் கொழும்பு உட்பட நாட்டின் 8 பகுதிகளில் நடத்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களை தொடர்ந்து நாட்டின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு படையினர் சோதனை நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதற்கமைய தலைநகர் கொழும்பில் முப்படையினர் குவிக்கப்பட்டுள்ளதுடன், கொழும்பின் முக்கிய பகுதிகளில் இன்று வியாழக்கிழமை திடீர் சோதனைநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அதற்கமைய சந்தேகத்திற்கு இடமான பொதிகள் , வாகனங்கள் மோட்டார் சைக்கிள்கள் என்பவற்றை சோதனை செய்யும் நடவடிக்கைகளில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறாக , பாதுகாப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் கொழும்பின் முக்கிய பகுதிகளிலும் அரச மற்றும் தனியார் நிறுவனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

வழமைக்கு மாறான கொழும்பின் நிலை

குண்டுத்தாக்குதலையடுத்து பொதுமக்கள் பெரும் அச்சத்தில் உள்ள நிலையில் , கொழும்பின் முக்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிவோர் வழமைக்கு மாறாக மாலை வேளையில் அச்சத்துடன், வீடுகளுக்கு விரைந்து திரும்புவதை காணக்கூடியதாகவிருந்தது.

அத்துடன். சன நெரிசலுடன் காணப்படும் கடைதொகுதிகள் மூடப்பட்டும் அந்த பகுதிகள் சனப்புளக்கம் அற்ற நிலையிலும் காணப்பட்டன .

பாதுகாப்பு நடவடிக்கை

குண்டுத்தாக்குதலுக்கு இலக்கான கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் கடற்படையினரும் , பொலிசாரும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தனர். ஏனைய கத்தோலிக்க தேவாலயங்களுக்கும் முப்படையினரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

கொழும்பின் பிரபல ஹோட்டல்களான கிங்ஸ்பரி , கோல்பேஸ் ஹோட்டல் ,சினமன்கிராண்ட் மற்றும் சினமன் லேக் ஆகிய ஹோட்டல்களுக்கும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இதேவேளை , குணசிங்கபுர பஸ் நிலையம் , கோட்டை ரயில் நிலையத்தை அண்டிய பகுதிகளில் இராணுவத்தினர் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டதுடன், சந்தேகத்திற்கு இடமானவர்களிடம் சோதனை நடவடிக்கைளையும் மேற்கொண்டனர்.

கொழும்பு மத்திய வங்கி , உலக வர்த்தக மையம் உள்ளிட்ட முக்கிய அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

காலிமுகத்திடல் ஜனாதிபதி செயலகம் , மத்திய வங்கி மற்றும் உலக வர்த்தக மையம் ஆகியவற்றை அண்மித்த பகுதிகளில் போக்குரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதம் அடைந்தன. அத்துடன், வீதிகளில் வாகனங்கள் நிறுத்தப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகளும் இடம் பெற்றன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02