பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அனைத்து வகையிலும் ஒத்துழைப்பு - இலங்கை பஸ் பயணிகள் சங்கம்

Published By: R. Kalaichelvan

25 Apr, 2019 | 05:44 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட தொடர்குண்டு தாக்குதல்களைத் தொடர்ந்து அனைவரதும் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக பாதுகாப்பு துறையினரால் முன்னெடுக்கப்படும சகல நடவடிக்கைகளுக்கும் பூரண ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளதாக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் முன்னெடுக்கப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகளில் உயிரிழந்தவர்களுக்கு அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதோடு காயமடைந்து சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைவதற்காக அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் சார்பில் பிரார்த்தனை செய்கின்றோம்.

இந்த தொடர் குண்டு தாக்குதல்களால் நாட்டில் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்திற் கொண்டு பாதுகாப்புத்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. அவ்வாறு முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு நாம் பூரண ஒத்துழைப்பினை வழங்க தயாராகவுள்ளோம்.

பிரயாணிகள் தமது பயணப்பைகளை பஸ்ஸில் காணப்படும் ரெக்கில் வைப்பதற்கு இடமளிக்கப்பட மாட்டாது.

 பைகளை உரியவர்களே தம்மிடம் வைத்துக் கொள்ளுமாறு கோரிக்கை விடுக்கின்றோம். இதற்கான சகல பஸ் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளை வரவேற்கின்றோம்.

பயங்கரவாதத்தை தோல்வியடைச் செய்வதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்று அகில இலங்கை பஸ் பயணிகள் சங்கம் அழைப்பு விடுப்பதாகவும் அதன் செயலாளர் கெமுனு பரனவிதாரண தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11