இலங்கை அரசியல்வாதிகளுக்கு அமெரிக்காவிடுக்கும் அறைகூவல்

Published By: Rajeeban

25 Apr, 2019 | 04:35 PM
image

இலங்கையின் அரசியல் தலைவர்கள் தங்கள் கருத்துவேறுபாடுகளை கைவிட்டுவிட்டு முக்கிய பாதுகாப்பு பொருளாதார பிரச்சினைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

புளும்பேர்க் சர்வதேச ஊடகத்திற்கு அளித்துள்ள பேட்டியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் அரசியல் தலைவர்கள் அரசியல் பேதங்களை கைவிட்டுவிட்டு அரசியல்நிலவரத்திற்கு தீர்வை காண்பதற்கு முன்வரவேண்டும் என தூதுவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் நண்பர்கள் ஏற்கனவே அரசியல் தலைவர்கள் அரசியலை கைவிட்டு நாட்டின் தேவைகள் குறித்து கவனம் செலுத்தவேண்டும் என தெரிவித்து வருகின்றனர் என குறிப்பிட்டுள்ள தூதுவர் குறிப்பாக நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்துமாறு கோருகின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்

அரசியலை அடிப்படையாக கொண்ட நிலைப்பாடுகள் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதை காணமுடிகின்றது என தெரிவித்துள்ள தூதுவர் இந்த தருணத்தை பயன்படுத்தி அரசியல் ரீதியில் இலாபமடைவதற்கு பலர் முயல்கின்றனர் எனவும் தெரிவித்துள்ளார்

குண்டுதாக்குதலில் கொல்லப்பட்டவர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் குறித்து ஆழமாக சிந்திக்குமாறு நான் அவர்களை கேட்டுக்கொள்கின்றேன் என அலைனா டெப்பிளிட்ஸ் தெரிவித்துள்ளார்

நாட்டிற்கான விளைவுகள் குறி;த்து ஆழமாக சிந்திக்குமாறும் கேட்டுக்கொள்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

அதிநவீன உத்திகளை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த தாக்குதல் குறித்த விசாரணைகளில் அமெரிக்காவின் எவ்பிஐ இலங்கை அதிகாரிகளிற்கு உதவி வருகின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருட இறுதியில் இலங்கையில் உருவாகி அரசமைப்பு நெருக்கடி முதலீட்டாளர்களையும்  சுற்றுலாப்பயணிகளையும் ஒரு கணம் சிந்திக்கவைத்தது எனவும் அமெரிக்க தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

புலனாய்வு விடயத்தில் பாரிய தவறுகள் இழைக்கப்பட்டதை அரசாங்கமே  ஏற்றுக்கொள்கின்றது எனவும் குறிப்பிட்டுள்ள அமெரிக்க தூதுவர் இந்த பலவீனங்களை நிவர்த்தி செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறவேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56