நீரிழிவு நோயால் ஏற்படும் புண்களுக்கான நவீன சிகிச்சை

Published By: Daya

25 Apr, 2019 | 02:28 PM
image

தற்காலத்தில் முப்பது வயதைக் கடந்த ஆண்களும், முப்பத்தைந்து வயதைக் கடந்த பெண்களும் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுவது அதிகரித்து வருகிறது. இவர்கள் பரிசோதனை செய்து கொண்டு உறுதி செய்து கொண்ட பின்னரும் அலுவலகச் சூழல் மற்றும் பயணச் சூழல் காரணமாக சரியான உணவினையோ அல்லது தற்காப்பு விடயங்களையோ மேற்கொள்ள முடிவதில்லை அல்லது தொடர்ந்து பின்பற்ற முடிவதில்லை. அதனால் சர்க்கரையை கட்டுப்பாட்டுக்குள் வைக்க தவித்து வருகிறார்கள். 

பெண்கள் சமையலறையில் பணியில் ஈடுபடும் போது எதிர்பாராத வகையில் தீப்புண்களுக்கு ஆளாகிறார்கள். ஆண்களும் விபத்தின் போது சிறிய அளவில் பாதிக்கப்படுகிறார்கள். இதனால் இவர்களுக்கு புண்கள் ஏற்படுகிறது. சாதாரண நிலையில் இருக்கும் போது உடலில் புண்கள் ஏற்பட்டாலே அவை குணமாக ஒரு வாரம் கூட ஆகலாம். தற்போது நீரிழிவு நோயும் உடனிருப்பதால், அந்த புண் குணமாவதில் ஏராளமான சிக்கல்கள் உருவாகின்றன. இதனால் மன உளைச்சலும் அதிகமாகிறது. 

மக்களின் இந்த நிலையை உணர்ந்த வைத்திய உலகம், நீரிழிவால் ஏற்பட்ட புண்களை குணப்படுத்துவதற்காகவே ‘ஹைப்பர்பேரிக் ஒக்ஸிஜன் தெரபி’ என்ற புதிய நவீன சிகிச்சையை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இந்த சிகிச்சையின் போது, சுற்றுபுறத்தின் அழுத்தத்தை அதிகரித்து, தூய்மையான ஓக்ஸிஜனை சுவாசிக்கச் செய்வார்கள்.

தூய்மையான ஒக்ஸிஜன் இரத்தத்தில் உள்ள பிளாஸ்மா எனும் நீர்மத்திசுவின் செயற்பாட்டை பன்மடங்கு அதிகரிக்கச் செய்கிறது. இந்த சிகிச்சை மூலம் திசுக்கள் புதுப்பிக்கப்படுவதுடன், ஏற்கெனவே இருக்கும் திசுக்கள் அழியாமலும் பாதுகாக்கப்படுகின்றன. அதே தருணத்தில் இவை பக்டீரியா, வைரஸ்களுக்கு எதிராகவும் செயற்படுகிறது. இதன் மூலம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்படும் புண்களுக்கு சத்திரச் சிகிச்சையின்றி சிகிச்சையளிக்க இயலுகிறது. அத்துடன் இந்த சிகிச்சையின் மூலம் கதிர்வீச்சினால் ஏற்படும் காயங்கள், தீக்காயங்கள், நோய்த்தொற்றுகள், விபத்துக் காயங்கள் உள்ளிட்டவற்றையும் குணப்படுத்த இயலும். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32