குண்டு சத்தத்தில் மௌனித்த குடும்பம்.

Published By: Digital Desk 4

25 Apr, 2019 | 10:44 AM
image

இயேசு உலகமக்களுக்காக பாவத்தை ஏற்று மரித்து மீண்டும்  உயிர்த்தெழுந்த நாளான உயிர்த்த ஞாயிறு தினத்தில் ஒவ்வொரு கிருஸ்தவரும் தமது மனதில் பல வேண்டுதல்களுடன் யேசுகிரஸ்துவை ஆராதிக்க தேவாலயங்கள் நோக்கி தமது உறவுகளுடன் பயணித்த காலைபொழுது தான் அது.

அந்த விடியலை எமது தாய்நாட்டின் சரித்திரத்தில் இரத்தக்கறையாக்கிய சம்பவத்தை  எண்ணும்போதே உணர்வுகளை  உறையச்செய்கின்றது. தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்ற 9 இடங்களில் அதிக உயிர் இழப்புகள் பதிவாகியது நீர்கொழும்பு செபாஸ்டியன் தேவாலயத்தில் தான்.

மனம் நிறைய இறைச்சிந்தனையுடன் தேவாலயத்தில் உட்பகுதியில் கண்களை மூடி தரித்திருந்த எமது உறவுகள் சற்றும் எதிர்பார்க்காத சில நொடிகளில் யுத்தபூமியில்  கண்திறந்தார்கள். ஆராதனையின் வரிகள் கூட முழுமையடையாத அந்த நொடியில் நூற்றுக்கணக்கில் உயிர்கள் பலியாகி இருந்தன. 

குழந்தையை தேடும் தாயும் தாயை தேடும் குழந்தையும் கொடூரத்தின் உச்சம். தன்னுடன் வந்தவர்கள் அருகில் இருந்தவர்கள். இன்முகம் காட்டி கண் இமைத்தவர்கள் என ஒவ்வொருவர் கண்களும் தேடி அழும் அந்த சோக ஓசைக்கு இடையில் ஒரு நிசப்பதம். அது ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து உறுப்பினர்களும் ஒன்றாக மௌனித்தது தான்.

குடும்பத்துடன் காலை ஆராதனையில் கலந்து கொண்ட  ரங்கன பெர்னாண்டோ, இது தான் தமது இறுதி ஆராதனை  என அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவரது மனைவி டனாடிரி, 6 வயது மகள் பயோலா, 4 வயது மகள் லியோனா மற்றும் பிறந்து ஏழு மாதங்களே ஆன மகன் செத் என ஐவரும் தாக்குதலின் மூலம் ஒன்றாக கொள்ளப்பட்டனர். 

இந்த அழகிய குடும்பத்தின் நல்லடக்கம் நேற்றைய தினம் நீர்கொழும்பில் இடம்பெற்றது. அத்துடன் இன்னும் பல உறவுகளின் சொல்லா துயரத்தை தாங்கிய நல்லடக்கங்களும் நேற்றைய தினம் இடம்பெற்றிருந்தன. 

கவலைகளை இறக்கி வைக்கவே நாம் ஒவ்வொருவரும் இறைவழிபாட்டு தளங்களை நாடுகின்றோம். ஆனால் கவலைகளை மீட்கமுடியாத இழப்புகளையும் நாம் சந்தித்த உயிர்த்த ஞாயிறு தினம் இலங்கையரை மட்டுமன்றி உலகில் உள்ள அனைவரையும் பெரும் துயரில் ஆழ்தியுள்ளது.  

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மூளையில் காயத்தால் இறந்த குழந்தை :...

2024-03-28 11:20:31
news-image

இலங்கையில் தேசியவாதம் தோல்வியடைந்து விட்டது -கனடா...

2024-03-27 15:52:43
news-image

அதிகரித்துவரும் சிறு வயது கர்ப்பங்களும் விளைவுகளும்

2024-03-27 12:28:26
news-image

சர்ச்சையான கருத்துக்களுக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி...

2024-03-27 11:57:52
news-image

ரஸ்ய - உக்ரைன் போர் களங்களில்...

2024-03-26 17:45:40
news-image

நல்லிணக்கம் பற்றிய கதையளப்புகளுக்கு மத்தியில் வடக்கு,...

2024-03-26 14:35:09
news-image

மன்னரை தொடர்ந்து இளவரசி : அதிர்ச்சியில்...

2024-03-25 21:18:44
news-image

துப்பாக்கி ரவைகளும் பீதியும் படுகொலையாக மாறிய...

2024-03-25 16:29:48
news-image

பலஸ்தீன இனப்படுகொலைக்கு மேற்குலகின் ஆதரவு 

2024-03-25 16:01:54
news-image

காஸாவுக்குள் பலஸ்தீன அதிகார சபையைத் திணித்தல்...

2024-03-25 15:24:04
news-image

ஒற்றுமை பற்றி பேசிப்பேசியே பிளவுபட்ட முஸ்லிம்...

2024-03-25 14:21:50
news-image

பிசுபிசுத்த நம்பிக்கையில்லா பிரேரணை

2024-03-25 14:16:49