ஆற்றலை அதிகப்படுத்தும் எட்டு வடிவ நடைபயிற்சி

Published By: Digital Desk 4

24 Apr, 2019 | 04:50 PM
image

வழக்கமாக நாம் வீடுகளிலோ, பூங்காகளிலோ, ஆள் அரவமற்ற சாலைகளிலோ அல்லது மொட்டை மாடியிலோ தான்  நடைபயிற்சியை மேற்கொள்வோம். இந்நிலையில் அண்மைய ஆய்வுகளின் படி மேலைத்தேய நாடுகளில் உள்ள பூங்காக்களில் எட்டு என்ற எண்ணை பக்கவாட்டில் படுக்கவைத்தால் என்ன தோற்றம் வருமோ...அந்த தோற்றத்தில் பூங்காவை அமைத்து அதில் நடைபயிற்சி மேற்கொள்கிறார்கள்.

இப்படி மேற்கொள்வதால் என்ன நன்மை? என கேட்கலாம். இப்படி எட்டு என்ற எண் வடிவத்தில் ஒரு நடைபாதையை அமைத்து அதில் நடைபயிற்சி மேற்கொண்டால், எம்முடைய குழந்தைகளின் மூளை வளர்ச்சி தூண்டப்படுகிறது. கவனச் சிதறல் மற்றும் கவன குறைபாடு இருந்தால் களையப்படுகிறது. வயதானவர்களின் நடையில் சமநிலை பேணப்படுகிறது. 

வழக்கமான நடைபயிற்சியை விட இது போன்ற எட்டு வடிவத்தில் நடைபயிற்சி மேற்கொள்ளும் போது ஒரு சுழற்சி முறையை பின்பற்றுகிறோம். இதனால் எம்முடைய பிராண உடலில் அமைந்திருக்கும் சக்தி செறிவு மண்டலங்களின் சுழற்சியும் அதிகரிக்கிறது.

 இதனால் உடலின் ஆற்றல் அதிகரிக்கிறது. எப்படி காற்றாலைகளிலிருந்து மின்சாரம் பெறப்படுகிறதோ அதே போல் நாம் இந்த முறையில் சுற்றி வரும் போது எம்முடைய உடலைச் சுற்றி பரவியிருக்கும் மின்காந்த அலைகளின் அளவும் அதிகரிக்கும். இப்படி அவை அதிகரிக்கும் போது எம்முடைய உடலில் உள்ள நோய், எதிர்மறை எண்ணங்கள் மற்றும் உணர்வுகள் நீக்கப்பட்டு தூய்மையடைகிறது. இதனால் எம்முடைய உடல் ஆற்றலைப் பெறுவதோடு தொடர்ந்து ஆரோக்கியமாகவும் இயங்க காரணமாகிறது.

இந்த முறையிலான நடைபயிற்சியை காலையில் வெறும் வயிற்றில் பத்து முதல் பதினைந்து நிமிடம் வரை செய்வதே சாலச்சிறந்தது. வேகமாக நடப்பதை விட அடிமேல் அடி எடுத்து வைத்து நடப்பது கூடுதல் பலனைத்தரும். நடக்கும் போது கைகளை வீசி நடக்கவேண்டிய அவசியமில்லை. 

இத்தகைய பயிற்சியின் போது தடங்களில் கூழாற்கற்கள் போட்டு வைத்துக்கொண்டு நடந்தால் அக்குபிரஷர் புள்ளிகளும் செயல்பட்டு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இந்த பயிற்சியின் போது உங்களின் மூளைக்கு மட்டுமல்ல உடலின் எல்லா பாகங்களுக்கும் ஆற்றலின் சுழற்சி அதிகரிக்கின்றது. இதனால் கவனத்திறன் அதிகரிக்கிறது. அடிமேல் அடி எடுத்து வைப்பதாலல் சமநிலையுடனும் இருக்கமுடியும். இதனை தொடர்ந்து செய்துகொண்டே வாருங்கள். உங்களின் திறன் மேம்படுவதுடன் உங்களின் எண்ணங்களின் ஆற்றலும் அதிகரித்திருப்பதை உணர இயலும்.

டொக்டர் பரத்குமார்

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அதீத கொழுப்பு பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-04-18 17:30:48
news-image

ஈஸோபாகல் அட்ராஸியா எனும் உணவு குழாய்...

2024-04-17 17:43:31
news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29