(க.கிஷாந்தன்)

வட்டவளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன் - கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேனை பகுதியிலிருந்து அக்கரப்பத்தனை பகுதியை நோக்கி சென்ற வேன் ஒன்று வீதியை விட்டு விலகி வட்டவளை டீ காடன் பகுதியில் 200 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இன்று அதிகாலை 4.30 மணியளவில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

வேனில் சாரதியும் மற்றொருவரும் பயணித்துள்ளதாகவும், சாரதி பாய்ந்து உயிர் தப்பியுள்ளதாகவும் மற்றொருவர் சிறு காயங்களுக்குள்ளாகி வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வட்டவளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.