(க.கிஷாந்தன்)

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை ரொசிட்டா பகுதியிலிருந்து கொட்டகலை வூட்டன் பகுதிக்கு சென்ற வேனில் மோதுண்ட சிறுமி காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து நேற்றிரவு இரவு 7 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொட்டகலை லொக்கில் பிரதேசத்தை சேர்ந்த 7 வயது நிரம்பிய சிறுமி கொட்டகலை வூட்டன் பசார் பகுதியில் மஞ்சள் கடவையை கடக்கும் போது வேன் மோதியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். குறித்த வேனையும், சாரதியையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த சம்பவத்தில் காயங்களுக்குள்ளான சிறுமிக்கு பெரிதான ஆபத்துக்கள் இல்லை என்றும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை திம்புள்ள பத்தனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.