எந்த வடிவிலான தீவிரவாதத்திற்கும் இடமளிக்க முடியாது -கோத்தபாய 

Published By: Digital Desk 4

23 Apr, 2019 | 10:08 PM
image

(இராஜதுரை ஹஷான்)

தொடர் குண்டுத் தாக்குதல்களை நடத்திய கோழைகள் எவ்விதமான மனிதாபிமானம் அற்றவர்கள். எந்தவொரு போதனைக்கும், சமய நம்பிக்கைக்கும் அல்லது நற்சிந்தனைக்கும் அவர்கள் மதிப்பளிக்காதவர்கள். எமது நாட்டில் பேரழிவு, அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களது நோக்கமாகும். எந்த வடிவிலான தீவிரவாதத்திற்கும் எமது தாய்நாட்டில் இடம் கிடையாது. என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ விசேட அறிக்கையினை வெளியிட்டுள்ளார்.

அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது.

இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற கொடூரமான சம்பவங்கள் மிலேட்சதனமானது. பல நூற்றுக்கணக்கான அப்பாவி இலங்கை மக்கள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பிரஜைகள், அதிலும் பெரும்பான்மையாக தமது குடும்பத்தினர் மற்றும் உறவுகளுடன் பிரார்த்தனையிலும், கொண்டாட்டத்திலும் ஈடுபட்டவர்களை இலக்கு வைத்து இடம்பெற்ற மிலேச்சத்தனமான மற்றும் கோழைத்தனமான இப்பயங்கரவாத செயலை நான் மிகவும் வன்மையாகக் கண்டிகின்றேன்.

இக்குற்றங்களை மேற்கொண்ட கோழைகள் எவ்விதமான மனிதாபிமானமும் அற்றவர்கள். எந்தவொரு போதனைக்கும், சமய நம்பிக்கைக்கும் அல்லது நற்சிந்தனைக்கும் அவர்கள் மதிப்பளிக்காதவர்கள். எமது நாட்டில் பேரழிவு, அச்சம் மற்றும் குழப்பத்தை ஏற்படுத்துவதே அவர்களது நோக்கமாகும். 

எவ்விதமான அச்சங்களுமின்றி, கௌரவமாக வாழும் உரிமையை அனைத்து இலங்கை மக்களும் கொண்டுள்ளதுடன், தங்களதும், தங்களுடைய அன்பிற்குரியவர்களினதும் சிறந்த எதிர்காலத்தை முன்னெடுக்கும் உரிமையும் அவர்களுக்கு உண்டு. துயரம், அதிர்ச்சி மற்றும் அச்ச உணர்வு எம்மத்தியில் நிலவும் இத்தருணத்தில், தேசிய நலனைப் பேணுவதற்காக நாம் அனைவரும் ஒன்றுபட்டு உழைக்க வேண்டும் எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33