(வத்துகாமம் நிருபர்)

மாத்தளை மாவட்டத்தில் கலேவல பொலீஸ் பிரிவில் மேற்கொண்ட தேடுதல் ஒன்றின் போது முன்னாள் இராணுவ வீரர் ஒருவர் ஹெரோயின் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று வாக்கோட்டை என்ற இடத்தில் இடம் பெற்ற இச்சுற்றிவளைப்பில் ஊணமுற்ற ஒரு இராணுவ வீரரும் மற்றொருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். சொகுசு வீடு ஒன்றில் ஹெரோயின் போதைப் பொருட்களை பொதி செய்துகொண்டிருந்த போதே 14 கிராம் ஹெரோயினுடன் கைதாகியுள்ளனர்.

இதன் பெறுமதி நான்கு இலட்ச ரூபா எனப் பொலீஸார் தெரிவித்தனர். கலேவலப் பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை நடத்துவதுடன் மேலும் இது தொடர்பான தேடுதல் நடவடிக்கைகளை முன் எடுத்துள்ளனர்.