குற்றவாளிகள் அரசியல் அழுத்தத்தால் விடுதலை செய்யப்பட்டார்களா?  உண்மையை ஆராய்ந்து வருகின்றேன் ; கபீர் ஹாசீம்

Published By: Digital Desk 4

23 Apr, 2019 | 07:57 PM
image

(நா.தனுஜா)

அண்மையில் வனாத்தவில்லு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ பின்னர் அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. 

அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவரில் ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. 

ஆனால் இதன் உண்மைத்தன்மை குறித்து இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்பதுடன் தொடர்ச்சியாக இதுபற்றி ஆராய்ந்து வருகின்றேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் ஹாசீம் தெரிவித்தார்.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அங்கு அவர் தொடர்ந்தும் கூறுகையில்,

மாவனெல்லை பகுதியில் அண்மையில் வன்முறை சம்பவமொன்று பதிவாகியிருந்தது. அதன் பாரதூரத்தன்மையை அறிந்துகொண்டு அந்த விடயம் குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உரிய பொலிஸ் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியிருந்தேன். அத்தோடு அந்த விசாரணைகளுக்கு எம்முடைய முழுமையான ஒத்துழைப்பையும் வழங்கியிருந்தோம்.

அதேபோன்று வனாத்தவில்லு பிரதேசத்தில் வெடிப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்திலும் அது குறித்த விசாரணைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கியிருந்தோம். இந்நிலையில் வனாத்தவில்லு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஒருவரோ அல்லது இருவரோ பின்னர் அரசியல் பின்னணியை அடிப்படையாகக் கொண்ட அழுத்தங்கள் காரணமாக விடுதலை செய்யப்பட்டதாக அறியமுடிகின்றது. 

அவ்வாறு விடுதலை செய்யப்பட்டவரில் ஒருவர் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தற்கொலைக் குண்டுத்தாக்குதலை மேற்கொண்டு உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகின்றது. ஆனால் இதன் உண்மைத்தன்மை குறித்து இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என்பதுடன் தொடர்ச்சியாக இதுபற்றி ஆராய்ந்து வருகின்றேன் என்று குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40
news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55