இன்று உலக புத்தக தினம் 

Published By: R. Kalaichelvan

23 Apr, 2019 | 05:01 PM
image

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 23 ஆம் திகதி உலகளாவிய ரீதியில் உலக புத்தக தினமாக கொண்டாடப்படுகிறது. 

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினமான இன்றைய தினம் வாசிப்பை ஊக்குவிப்பதற்கான ஒரு சந்தர்ப்பமாக கருதப்படுகின்றது. ஆரம்பத்தில் பெரும் இலக்கியவாதிகளான வில்லியம் ஷேக்ஸ்பியர், மிகுவல் செர்வண்டஸ் மற்றும் இன்கா கார்சிலாசு டி லா வேகா உள்ளிட்டவர்களுக்கு  அஞ்சலி செலுத்துவதற்காக யுனெஸ்கோவினால் ஏப்ரல் 23 ஆம் திகதி தெரிவுசெய்யப்பட்டது. அதனை தொடர்ந்து 1995 ஆம் ஆண்டில் பாரிஸ் நகரில் நடைபெற்ற யுனெஸ்கோ பொது மாநாட்டில், உலகளாவிய ரீதியில் புத்தகங்கள் மற்றும் நூல் ஆசிரியர்களை கௌரவிக்கும் முகமாக  ஏப்ரல் 23 ஆம் திகதி  உலக புத்தக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டது.

புத்தகங்கள் அறிவை பரப்புவதற்கும் உலகெங்கும் உள்ள பல்வேறு  கலாசாரங்களை பற்றிய விழிப்புணர்வு பெறுவதற்கும், புரிதல், சகிப்புத்தன்மை போன்றவற்றின் மூலம் மனிதர்களின் ஒழுக்கத்தை  மேம்படுத்தவும் சிறந்த கருவியாக  உள்ளன. உலக புத்தகதினத்தில் யுனெஸ்கோவினால் ஒவ்வொரு ஆண்டும் ஒரு நாட்டின் தலைநகரம் உலக புத்தக நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டு நிகழ்வுகள் ஒழங்குசெய்யப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு  ஐக்கிய அரபு இராச்சியத்தின் தலைநகரான ஷார்ஜா உலக புத்தக தலைநகராக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் 2020 ஆம் ஆண்டில் உலக புத்தக மாநாடு மலேசியாவின் கோலாலம்பூரில் நடக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தகங்கள் கடந்த காலத்திற்கும் எதிர்காலத்திற்கும் இடையில் ஒரு இணைப்பை ஏற்படுத்துவதுடன்  பல தலைமுறைகளுக்கும்  கலாச்சாரங்களுக்கும் இடையில் பாலமாக அமைகின்றன. புத்தகங்கள் புறட்சிப் பாதையில் மௌனமான ஆயுதங்கள். எழுத்தாளர்கள் தமது அனுபவத்தையும் கற்பனையையும்  உலகளாவிய ரீதியில் பகிர்ந்து கொள்ளும் ஊடகமாக புத்தகங்கள் விளங்குகின்றன. 

சமூக வலைத்தளங்களின் வருகைக்கு முன் காலைப்பொழுதின் பூபாலமாகவும் இரவுகளின் தாலாட்டாகவும் விளங்கிய புத்தகங்கள் நூலகங்களிலும் புத்தக ராக்கைகளிலும் எமது விடியலுக்கான விடைகளுடன் உறங்குகின்றன. சிறுவர்கள் முதல் வயோதிபவர் வரை தமது இரசனைக்கும் தேடுதல்களுக்கும் ஏற்ப நூல் வடிவில் சிறந்த நண்பர்களை தேர்ந்தெடுக்க முடியும். அவை எமது வாழ்க்கை பயணத்தில் இறுதிவரை ஒளி கொடுக்கும் என்பதில் ஐயமில்லை.

உங்கள் வீடுகளில் தேவையற்றதாக கருதி நீங்கள் தூக்கி எறிந்த நூல்கள் எத்தனையோ  இருக்கலாம். அவை உங்கள் உறவுகள் உங்களுக்காக விட்டுச்சென்ற சொத்துக்கள். அவற்றை ஒரு முறையேனும் தூசுதட்டி வாசித்து பாருங்கள். உங்கள் வாழ்வின் பல கேள்விகளுக்கான பதில்கள் அதில் மறைந்திருக்க வாய்ப்புள்ளது. அத்துடன் சிறுவர்களுக்கு புத்தக வாசிப்பில்  ஈடுபாட்டை ஏற்படுத்துவதன் மூலமாக ஒழுக்கமானதும் அமைதியானதுமான எதிர்கால சமூகத்தை உருவாக்க அனைவரும் ஒன்றிணையலாம். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மத்திய கிழக்கு புவிசார் அரசியலில் ஈரானின்...

2024-04-19 18:33:36
news-image

எல்லா காலத்துக்கும் மிகவும் முக்கியமான ஒரு...

2024-04-19 14:59:40
news-image

கச்சதீவை வைத்து அரசியல் செய்யாதீர்கள்

2024-04-19 14:37:29
news-image

இந்தியப் பெருங்கடலில் 'சீனா - குவாட்'...

2024-04-18 10:36:33
news-image

'ஆரம்பிக்கலாமா?' : தமிழை கையிலெடுத்துள்ள பிரதமர்...

2024-04-17 19:36:36
news-image

சர்வதேச நீதிமன்றத்தில் ஆர்மேனியா - அஸர்பைஜான்...

2024-04-17 19:37:33
news-image

சிங்களவர்களாக ஒருங்கிணையும் இந்தியத் தமிழர் –...

2024-04-17 18:00:59
news-image

பிரித்தானியாவில் ஆளுங்கட்சி தோல்வி? சொந்த தொகுதியில்...

2024-04-17 11:04:13
news-image

பரந்த கோட்பாடுகளில் இருந்து நடைமுறையில் பிரச்சினைகள்...

2024-04-16 16:00:03
news-image

ஈரானின் அதிரடி தாக்குதல் ; இஸ்ரேல்...

2024-04-16 10:56:59
news-image

ஜனாதிபதி தேர்தலில் அரசியல் கணக்குகள்

2024-04-16 01:48:16
news-image

ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தேசிய கட்சியாக...

2024-04-15 19:01:13