தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் கூகுள்

Published By: Digital Desk 3

23 Apr, 2019 | 10:22 AM
image

இலங்கையில்  கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மிலேச்சத்தனமான தீவிரவாத தொடர் தற்கொலைக்குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த அப்பாவிப் பொதுமக்களுக்கு அஞ்சலி செலுத்துமுகமாக கூகுள் இன்றைய தினம் தனது இலங்கைக்குரிய முகப்புப் பக்கத்தில் கறுப்பு நிறத்திலான ரிபனை பிரசுரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த உயிர்ப்பு ஞாயிறுதினத்தில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்கள் மற்றும் தாக்குதலைக் கண்டித்து இன்றையதினம் 23 ஆம் திகதி தேசிய துக்கதினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியிருந்தது.

இதேவேளை, இன்றைய தினம் காலை 8.30 மணியிலிருந்து 8.33 மணிவரையான 3 நிமிட நேரங்களில் துக்கதினத்தை அனுஷ்டிக்குமுகமாக அனைவரையும் மௌன அஞ்சலி செலுத்துமாறு கேட்டுக்கொள்ளப்பட்டிருந்தது.

எனவே உயிரிழந்த மக்களுக்கு மரியாதை செலுத்தும் முகமாகவும், துக்க தினத்தை அனுஷ்டிக்கும் முகமாகவும் கூகுள் தனது முகப்பு பக்கத்தில் கறுப்பு நிறத்திலான ரிபனை வெளியிட்டுள்ளது.

மேலும் 8 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் தொகை 310 ஆக உயர்வடைந்துள்ளதுடன் 500 க்கும் அதிகமான மக்கள் காயமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40