அவசர கால சட்டத்தை அமுல்படுத்தவதற்காக வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

இந்நிலையில் நாட்டில் அவசரகால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்றைய தினம் வெளியிட்டுள்ளார்.

கடந்த உயிர்ப்பு ஞாயிறு தினத்தன்று நாட்டின் பல பகுதிகளில் பயங்கரவாதிகளால் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக்குண்டுத்தாக்குதலில் 290 க்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டும் 500 க்கும் அதிகமான மக்கள் கயமடைந்துமுள்ளனர்.

இந்நிலையில் நாட்டின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் தொடர்ந்து பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு வருகின்றது.

இதனையடுத்தே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அவசர கால சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி வெளியிட்டு வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது