கொச்சிக்கடை, தலைநகர் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இன்று நடந்தது என்ன?

Published By: Vishnu

22 Apr, 2019 | 10:44 PM
image

(எம்.எப்.எம்.பஸீர்)

கொழும்பு - கரையோர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொச்சிக்கடை புனித அந்தோனியர் ஆலயத்துக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வெள்ளை நிற வேனிலிருந்து அதி சக்திவாய்ந்த வெடிபொருட்கள் அடங்கிய பொதிகள் கண்டுபிடிக்கப்பட்டது.

குறித்த தேவாலயத்தில் குண்டுத் தாக்குதல் நடத்த தற்கொலை குண்டுதாரி என சந்தேகிக்கப்படும் நபர் அவ்விடத்துக்கு வருகை தந்ததாக கருதப்படும் சிறிய ரக வேனில் இருந்தே இந்த வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ருவன் குனசேகர தெரிவித்தார். 

இந் நிலையில் அந்த வெடிபொருட்கள், பிரதேச மக்கள் அப்புறப்படுத்தப்பட்ட பின்னர் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரால் பாதுகாப்பாக வெடிக்க வைக்கப்பட்டதாக பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர மேலும் தெரிவித்தார்.

கொழும்பு - கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்திலும் மேலும் 7 இடங்களிலும் நேற்று தொடர் தற்கொலை குண்டுத் தக்குதல்கள் நடத்தப்பட்டன. இதன்போது கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயத்துக்கு தற்கொலை குண்டுதாரி வருகை தந்ததாக கருதப்படும் வேன்,  தேவாலயம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந் நிலையில் இன்று நண்பகல் சோதனையில் போது, அவ் வேனில்  சக்தி வாய்ந்த வெடி பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.

குறித்த வேனின் பின் பகுதியில் இரு பெட்டிகளில் அந்த வெடிபொருட்கள் வைக்கப்பட்டிருந்ததுடன் இரு பெட்டிகளும் ஒரு பாவையைக் கொண்டு இணைக்கப்பட்டிருந்ததாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார். இதனால் அந்த வெடிபொருளை வேனில் இருந்து அகற்றுவது சாத்தியமற்றதாக இருந்ததால்,  பாதுகாப்புத் தரப்பினர் பயன்படுத்தும் 'பாதுகாப்பான வெடிப்பு' எனும் கோட்பாட்டை பயன்படுத்த பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவு தீர்மானித்துள்ளது. 

அதன்படி பிற்பகல் 3.30 மனிக்கும் நான்கு மணிக்கும் இடையில், பிரதேச மக்கள் அனைவரும் குடியிருப்புக்கள் மற்றும்  பாதைகளில் இருந்து பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்பட்டனர். 

இதனையடுத்து வேனில் கதவுகள் திறக்கப்பட்டு, பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் குண்டு செயழிழப்பு தொடர்பில் நிபுணத்துவம் பெற்ற அதிகாரி ஒருவரின் நேரடி கட்டுப்படடில்,  துறைமுக பகுதிக்குள் இருந்து செயற்கை அதிர்வு கொடுக்கப்பட்டு  பெட்டிகளில் இருந்த வெடிக்கச் செய்யப்பட்டது. இதன்போது அது பாரிய சத்தத்துடன் வெடித்துச் சிதறியது.

குறிப்பாக புனித அந்தோனியார் தேவாலயத்தில்  தற்கொலை தககுதல் நடத்திய நபர்,  தாக்குதலைத் தொடர்ந்து அங்கிருந்து தப்பியோடும்  பொது மக்களை இலக்குவத்தி குறித்த வெடிபொருட்களை வேனில் வைத்திருந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இதனிடையே கொழும்பு – புறக்கோட்டை பெஸ்ட்டியன் மாவத்தையில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின்போது 87 டெடனேட்டர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெஸ்ட்டியன் மாவத்தையிலுள்ள தனியார் பஸ் நிலையத்தில் 12 டெடனேட்டர்கள் வீழ்ந்து கிடந்துள்ளன. அதனையடுத்து அங்கு முன்னெடுக்கப்பட்ட அங்கு குப்பை குவிக்கப்பட்ட இடத்தில் 75 டெடனேட்டர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந் நிலையில் நண்பகல் கொழும்பின் பாதுகாப்பை உறுதி செய்ய விஷேட சோதனை நடவடிக்கைகளை பொலிஸார், பொலிஸ் விஷேட அதிரடிப் படையினருடன் இணைந்து முப்படையினர் முன்னெடுத்திருந்தனர்.

1000 இரானுவ வீரர்கள், கடற்படை விமானப்படை வீரர்கள் இந்த சோதனைகளில் பங்கேற்றிருந்தனர். இதன்போது பல்வேறு சந்தேகத்துக்கு இடமான இடங்கள்,  வாகங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. 

குறிப்பாக  இன்று கோட்டை புகையிரத நிலையத்தில் சந்தேகத்துக்கு இடமான பொதி ஒன்றினால் அச்சம் ஏற்பட்டிருந்தது. இதனால் அங்கிருந்த பயணிகள் அப்புறப்படுத்தப்பட்டு குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினர் வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்ட போது அது சாப்பாட்டு பொதி என்பது தெரியவந்துள்ளது.

இதேவேளை வெலிசறை - நவலோக்க மைதானம் அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரொன்றினால் சுமார் அரை மணி நேரத்துக்கும் அதிகமான நேரம் நீர்கொழும்பு - கொழும்பு பிரதான வீதியின் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. 

எனினும் அந்த காரை சோதனைச் செய்த போது அங்கு பொருட்களோ, வெடி பொருட்களோ கண்டுபிடிக்கப்படவில்லை. இதேநேரம் கொழும்பு - நீர்கொழும்பு பிரதான வீதியின் கட்டுநாயக்க சந்தி பகுதியில் பாதையோர மதில் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த பொம்மை தலை  காரணமாக அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டிருந்தது. 

இதேநேரம் கல்கிஸை - டெம்லட்ஸ் குடியிருப்பு பகுதியில் வீடொன்றில் குண்டு வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தங்கிருப்பதாக கிடைக்கப் பெற்றிருந்த தகவல் ஒன்றுக்கு அமைய பொலிஸ் விஷேட அதிரடிப் படையினர் அங்கும் சோதனை நடத்தியிருந்தனர். 

அத்துடன் இன்று மாலை மருதானை பகுதியில் சந்தேகத்துக்கு இடமான பொதி இருப்பதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கமைய அங்கும் குண்டு செயழிழக்கச் செய்யும் பிரிவினருடன் இணைந்து சோதனை நடத்தப்பட்டுள்ளது. எனினும் அங்கு கண்ணாடி துண்டொன்றே இருந்ததாக  பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

எவ்வாறாயினும் நாடளவிய ரீதியிலும் குறிப்பாக கொழும்பிலும் பாதுகாப்பை உறுதி செய்ய தீவிர சோதனைகளை முன்னெடுக்க பொலிஸ் தலைமையகம் அனைத்து பொலிஸ்  உயர் அதிகரைகளுக்கும் அறிவுறுத்தல் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுங்கத் திணைக்கள அதிகாரிகளின் சட்டப்படி வேலை...

2024-03-19 14:30:11
news-image

கட்டுநாயக்கவிலிருந்து புறப்பட்ட விமானம் மீண்டும் தரையிறக்கம்!

2024-03-19 14:13:26
news-image

ஹெரோயின் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

2024-03-19 14:18:01
news-image

அவுஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் குழு யாழ்.பல்கலைக்கு...

2024-03-19 14:04:31
news-image

பொது மக்கள் எங்கும் தீ வைக்க...

2024-03-19 13:41:34
news-image

யாழில் கல்லூரி வீதிக்கு ரயில் கடவை...

2024-03-19 12:58:21
news-image

பாதாள உலக நடவடிக்கைகளை ஒடுக்க 20...

2024-03-19 12:43:19
news-image

இந்தியாவிலிருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய அமைச்சரவை...

2024-03-19 12:38:07
news-image

தகாத உறவினால் பிறந்த குழந்தையைக் கொன்ற...

2024-03-19 12:11:22
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-19 12:09:35
news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15