பொருளாதாரத்தின் மீதான தாக்கத்தை சீர்செய்வதற்கு விசேட கலந்துரையாடல்

Published By: Digital Desk 4

22 Apr, 2019 | 08:03 PM
image

(நா.தனுஜா)

நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதல்களால் பொருளாதாரத்தில் பெருமளவு தாக்கம் ஏற்பட்டுள்ளது. அதனை மீண்டும் சீர்செய்வதற்கு ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள், கொழும்புப் பங்குச்சந்தை மற்றும் சுற்றுலாப்பயணத்துறை முகவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்கவுள்ளோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் கபீர் காசீம் தெரிவித்தார்.

இன்று அலரிமாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையலில், 

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டுத்தாக்குதல்களால் பொருளாதாரம் வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையைச் சீர்செய்வதற்கு அமைச்சர்களான மங்கள சமரவீர மற்றும் எரான் விக்ரமரத்ன தலைமையில் ஏற்றுமதியாளர்கள், முதலீட்டாளர்கள், கொழும்பு பங்குச்சந்தை மற்றும் சுற்றுலாப்பயணத்துறை முகவர்கள் ஆகிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்திருக்கின்றோம்.

எமது நாட்டில் இடம்பெற்றது போன்ற பலமடங்கு வலிமையான தாக்குதல்களை கடந்த காலங்களில் பல ஐரோப்பிய நாடுகள் எதிர்கொண்டிருக்கின்றன. அதனாலேற்பட்ட சேதங்களிலிருந்தும் அந்நாடுகள் மீண்டு வந்திருக்கின்றன. 

அதேபோன்று நாமும் இத்தகைய மிலேச்சத்தனமான தாக்குதல்களால் சோர்ந்து விடாமல் மீண்டெழுவோம் என்பதை வெளிப்படுத்தும் வகையில் செயற்பட வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முட்டை விலை அதிகரிப்பினால் கேக் உற்பத்தி...

2024-04-16 14:59:40
news-image

உலகில் மிகவும் சுவையான அன்னாசிப்பழத்தை இலங்கையில்...

2024-04-16 14:28:01
news-image

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வழங்கப்படும் உணவுகள்...

2024-04-16 14:22:41
news-image

மரக்கறிகளின் விலைகள் குறைவடைந்தன!

2024-04-16 14:35:09
news-image

கொழும்பு கோட்டை ரயில் நிலைய மேடையை...

2024-04-16 13:46:47
news-image

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சில...

2024-04-16 13:15:21
news-image

பாதாள உலகக் குழுக்களைச் சேர்ந்த 7...

2024-04-16 13:15:00
news-image

யாழில் இரண்டரை கோடி ரூபாய் மோசடி...

2024-04-16 12:43:04
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-04-16 12:54:10
news-image

அன்னை பூபதிக்கு வவுனியாவில் அஞ்சலி

2024-04-16 14:42:04
news-image

சுவிஸ் நாட்டு பெண்ணை ஏமாற்றியதாக யாழ்.பொலிஸ்...

2024-04-16 12:07:37
news-image

ஹக்மனவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு இளைஞர்...

2024-04-16 12:54:37