ஈரான் நாட்டில் நடைபெற்ற ஆசிய இளையோருக்கான கபடி போட்டியில் பெண்கள் பிரிவில் வெண்கலப் பதக்கம் பெற்ற இலங்கை அணி சார்பாக பங்குப்பற்றிய மட்டக்களப்பு கிரான் கருணா விளையாட்டுக் கழக வீராங்கனை  ராசா கஜேந்தினியை வரவேற்கும் நிகழ்வு கடந்த செவ்வாய்கிழமை மாலை கிரானில் நடைபெற்றது.

 

கிரான் கருணா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்வில்  கஜேந்தினி மற்றும் அவரது தாயார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

கடந்த வருடம் நடைபெற்ற பாடசாலைகளுக்கிடையிலான தேசிய விளையாட்டு விழாவில் பெண்களுக்கான கபடி போட்டியில் முதலாம்  இடத்தைப் பெற்ற கிரான் மகா வித்தியாலய அணிக்காக விளையாடிய  கஜேந்தினி இறுதிப் போட்டியில் சிறப்பாட்டக்கராராகவும் தெரிவு செய்யப்பட்டிருந்தார்.

 

கொழும்பில் நடைபெற்ற தேசிய அணிக்கான தேர்வில் கலந்துகொண்டு தமது திறமைகளை வெளிப்படுத்தியதன் காரணமாக இலங்கை தேசிய இளையோர் கபடி அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் . 

 

இவர் கிழக்கு மாகாணத்திலிருந்து தேசிய கபடி அணிக்குத் தெரிவு செய்யப்பட்ட முதல் தமிழ் வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது.