புற்று நோயால் அவதிப்பட்டு வந்த மதவாச்சி புகையிரத நகரத்தை நிரந்தர வசிப்பிடடமாகக் கொண்ட நபரொருவர் தனது  கைத் துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக மதவாச்சி பொலிசார் தெரிவித்தனர். 

இவ்வாறு தற்கொலை செய்து கொண்டவர் ஏ.ஜீ. செனவிரத்ன (வயது-64) என்பவராவார். 

கடந்த பல வருடகாலமாக புற்று நோயால் அவதிப்பட்டு வந்த குறித்த நபர் உளவியல் ரீதியாக பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்துள்ளதுடன் வீட்டில் எவருமே இல்லாத நேரம்பார்த்து தனது கைத்துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

படுகாமடைந்த குறித்த நபரை மதவாச்சி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக எடுத்துச் சென்ற போதும் வைத்தியசாலையில் அனுமதிக்க முன்னரே அவர் மரணித்துள்ளார். 

சம்பவம் தொடர்பான விசாரணைகளை  மதவாச்சி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.