“ "கோத்தா" பயத்தை காட்டுகின்றனர் : மஹிந்த களமிறங்கினாலும் அச்சமில்லை ; விரைவில் ரஜபக்ஷவினர் சிறைக்குச்செல்வர்” 

Published By: Priyatharshan

20 Apr, 2019 | 08:31 AM
image

(ஆர்.யசி)

கோத்தா பயத்தை காட்டி ஏனைய கட்சிகளை அடக்கவே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி முயற்சித்து வருகின்றது. கோத்தாபய ராஜபக்ஷ அல்ல  மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் களமிறங்கினாலும் எமக்கு அச்சம் இல்லை என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா. கடந்த ஆட்சியில் செய்த குற்றங்களில் வெகுவிரைவில்  ராஜபக்ஷவினர் சிறைக்கு செல்ல நேரிடும் எனவும் அவர் குறிப்பிட்டார். 

தற்போதுள்ள அரசியல் நிலைமைகள் மற்றும் கோத்தாபய ராஜபக்ஷவை அடையாளப்படுத்தி  முன்னெடுக்கப்படும் அரசியல் நகர்வுகள் குறித்து வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இந்த ஆண்டு இறுதிக்குள் ஜனாதிபதி தேர்தல் இடம்பெறும், அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஜனாதிபதி தேர்தலை தள்ளிப்போட ஒரு சிலர் முயற்சிகளை எடுத்தாலும் கூட ஜனாதிபதி தேர்தல் இந்த ஆண்டுக்குள் இடம்பெறும். அதேபோல் இப்போது ஜனாதிபதி தேர்தலில் கோத்தாபய ராஜபக்ஷவின் பெயரை முன்வைத்து கோத்தா பயத்தை காட்டி ஏனைய கட்சிகளை அச்சுறுத்தலாம் என பொதுஜன முன்னணியினர் நினைத்துள்ளனர். 

அதனால் தான் அவர்கள் செல்லும் இடமெல்லாம் கோத்தாபய பெயரை கூறி வருகின்றனர். ஆனால் ஐக்கிய தேசிய கட்சிக்கோ முன்னணிக்கோ கோத்தா பயம் இல்லை. கோத்தாபய ராஜபக்ஷ அல்ல மஹிந்த ராஜபக்ஷவே மீண்டும் களமிறங்கினாலும் கூட அதைக்கண்டு நாம் அஞ்சப்போவதில்லை. எமது தலைவர்கள் தேர்தலுக்கு தயாராகியுள்ளனர். நாம் கூட்டணியாக தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டோம். எந்த சவாலையும் சந்திக்க நாம் தயார்.

வெகு விரைவில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள். செய்த குற்றங்களுக்காக ராஜபக்ஷ குடும்பத்தின் பலர் சிறைக்கு செல்ல நேரிடும். குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கம் எமக்கு இல்லை. எனினும் சட்ட தாமதங்கள் உள்ளன எனத் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

காதலியையும் காதலியின் தாயாரையும் கூரிய ஆயுதத்தால்...

2024-04-16 11:32:55
news-image

ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னராக வாகன வசதியை...

2024-04-16 11:23:44
news-image

கொவிட் ஆலோசனைகள் குறித்து வைத்தியர் சத்தியமூர்த்தியின்...

2024-04-16 11:19:30
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-16 11:21:15
news-image

அதிவேக நெடுஞ்சாலைகளின் 5 நாட்களின் வருமானம்...

2024-04-16 11:20:58
news-image

மீனவர்கள் பிரச்சினைகள் தொடர்பில் இந்திய மத்திய...

2024-04-16 11:15:15
news-image

இலங்கையிலிருந்து இஸ்ரேலுக்கான விமான சேவைகள் மீண்டும்...

2024-04-16 11:14:10
news-image

இலங்கையின் தென் கடற்பரப்பில் சிக்கிய 380...

2024-04-16 11:03:37
news-image

தமிழர்களை பயங்கரவாதிகளென அடையாளப்படுத்தி முன்னெடுக்கும் அரசியல்...

2024-04-16 10:56:51
news-image

மடாட்டுகமவில் யானை தாக்குதலுக்கு இலக்காகி 62...

2024-04-16 11:04:45
news-image

புத்தாண்டு காலத்தை இலக்காகக் கொண்டு நாடளாவிய...

2024-04-16 10:57:11
news-image

பாதாள உலகக் குழுத் தலைவரான “கணேமுல்ல...

2024-04-16 10:23:04