இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக  மனித உரிமை ஆணைக்குழு நடவடிக்கை

Published By: Digital Desk 4

19 Apr, 2019 | 04:59 PM
image

 இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக  மனித உரிமை ஆணைக்குழு துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.

இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக இரணைதீவு மக்கள் மற்றும் மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய காரியாலயத்தில்  முறைப்பாட்டை மேற்கொண்டிருந்தனர்.

இந்நிலையில் இரணைதீவு மக்களின் வாழ்வியல் பிரச்சினை தொடர்பாக தொடர்ச்சியாக ஊடகங்களிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.

இந்நிலையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ் பிராந்திய இணைப்பாளர் சி.கனகராஜ் தலைமையில் மனித உரிமை ஆணைக்குழுவினர் கடந்த மாதம் திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டு இரணைதீவிற்கு சென்றனர்.

குறித்த   விஜயத்தின் போது இரணை தீவு மக்களுடன் இது வரை மீள்குடியேற்றத்தின் பின்னர் பூர்த்தியாக்கப்பட்ட, பூர்த்தியாக்கப்படாத விடையங்கள் தொடர்பாக நேரடியாக கலந்துரையாடியுள்ளனர்.

இதன்போது குறித்த இரணைதீவு மக்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக மக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பாக உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கை ஒன்றினை எதிர் வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு   முன்னர்   சமர்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பாக பூநகரி பிரதேச செயலாளர் , கிளிநொச்சி அரசாங்க அதிபர் , மீள் குடியேற்ற புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

 குறித்த கடிதத்தில் கிராம சேவையாளரின் சேவைகள்,பிரதேச செயலகத்தின் நடவடிக்கைகள் ,சமுர்த்தி கொடுப்பணவுகள் வாழ்விடம்,நீர் தேவைப்பாடு,போக்குவரத்து,தபால் சேவை,மின்சாரம், சுகாதார திணைக்களத்தின் செயற்பாடு,வைத்தியத் துறை மத வழிபாடுகள்  தொடர்பாக மக்களால் தெரிவிக்கப்பட்ட முறைப்பாடுகள் மற்றும் கோரிக்கைகள் தொடர்பாகவும் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு அறிக்கையினை சமர்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையினை பூநகரி பிரதேசச் செயலாளர் , கிளிநொச்சி அரசாங்க அதிபர் , மீள் குடியேற்ற புனர்வாழ்வு வடக்கு அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் ஆகியோர்  எதிர் வரும் மே மாதம் 3 ஆம் திகதிக்கு     முன்பாக மனித உரிமை ஆணைக்குழுவில் சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளது என மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் இயக்குனர் ஜாட்சன் பிகிராடோ மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

4 முதல் 4.5 பில்லியன் டொலர்...

2024-04-17 01:41:44
news-image

புத்தாண்டு காலத்தில் நுகர்வோர் சட்டத்தை மீறிய...

2024-04-17 00:49:55
news-image

வைத்தியசாலை காவலாளிகள் மீது தாக்குதல் ஒருவர்...

2024-04-16 23:06:09
news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46