இரு வெளிநாட்டு யுவதிகளை கடத்திச் சென்று பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இச் சம்பவம் கடந்த 14ஆம் திகதி கண்டி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

 

20 மற்றும் 21 வயதான இரண்டு வெளிநாட்டு யுவதிகளே இவ்வாறு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர்.

 

சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டவர் இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

 

சம்வத்தின் போது குறித்த வெளிநாட்டு யுவதிகளிடம் இருந்து சுமார் ஒரு இலட்சத்து 22 ஆயிரம் ரூபா பணமும், இரண்டு கையடக்க தொலை பேசிகளும் திருடப்பட்டுள்ளதாக முறையிடப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.