வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவும் பெரும்பான்மை ஆதரவும் எமக்கு உண்டு சம்பிக்க 

Published By: Digital Desk 4

18 Apr, 2019 | 08:40 PM
image

(ஆர்.யசி)

ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பலரது கருத்துக்கள் உள்ள போதிலும் ஐக்கிய தேசிய முன்னணியாக ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவோம். வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவுடன் பெரும்பான்மை மக்களின் வாக்குகளையும் பெற்று உறுதியான வெற்றியை எம்மால் பெற முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். 

ஐக்கிய தேசிய முன்னணிக்குள் பல கருத்துக்கள் உள்ளன ஆனால் குழப்பம் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார். 

ஐக்கிய தேசிய கட்சிக்குள் பிரதான நபர்கள் இடையில் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் மற்றும் ஜனாதிபதியின் நகர்வுகள் குறித்தும் ஐக்கிய தேசிய முன்னணியின் தேர்தல் நகர்வுகள் குறித்தும் வினவிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறுகையில்,

இப்போது கட்சிக்குள் குழப்பங்கள் நிலவுவதாக கூறும் கதைகள்  அனைத்துமே பொய்யானவை. கட்சிக்குள் பல கருத்துக்கள் உள்ளன. ஐக்கிய தேசிய கட்சியாக சிலர் தமது நிலைப்பாட்டினை கூறுகின்றனர்.

ஐக்கிய தேசிய முன்னணியாக நாம் எமது நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். சிறுபான்மை மற்றும் சிறிய கட்சிகள் இடையில் பல கருத்துக்கள் நிலவுகின்றது. ஆகவே இவை அனைத்தையும் தாண்டி பொதுவான ஒரு நிலைப்பாட்டினை எம்மால் எட்ட முடியும். இப்போதும் அவ்வாறான நிலைப்பாடு ஒன்றினை   நாம் எட்டியுள்ளோம். 

எவ்வாறு இருப்பினும் இம்முறை ஜனாதிபதி தேர்தலே முதலில் இடம்பெறும் அந்தத் தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி வெற்றி பெரும்.  இதில் சிறிய மற்றும் சிறுபான்மை கட்சிகளின் ஆதரவில் வடக்கு கிழக்கு மக்களின் ஆதரவில் எம்மால் ஆட்சியை அமைக்க முடியும். 

சகல மகளுக்குமான பொதுவான வேலைத்திட்டம் ஒன்றினை நாம் நல்லாட்சியில் முன்னெடுத்து வருகின்றோம். அதனை தொடர்ந்தும் முன்னெடுத்து ஆரோக்கியமான திசைக்கு நாட்டினை கொண்டு செல்வோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59