தமிழ் மக்களின் நன்மைக்கு எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயார் -வடக்கு ஆளுநர்

Published By: R. Kalaichelvan

18 Apr, 2019 | 07:15 PM
image

தாய்மண்ணுக்கும் தமிழ் மக்களுக்கும் நன்மை நடக்கும் என்றால் எந்த எல்லைகளுக்கும் அப்பால் சென்று சேவைபுரிய தயாராக இருப்பதாக வடக்கு ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன்இன்று  முல்லைத்தீவு செம்மலை மகாவித்தியாலயத்தில் நடைபெற்ற தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டு விழாவில் பிரதம விருந்தினராக கலந்துகொண்டபோது இதனை தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கலந்துகொண்ட ஆளுநர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

30 ஆண்டுகள் போருக்கு பின் ஒரு சகாப்தம் முடிந்திருக்கின்றது. ஒரு தலைமுறையே எங்கள் தேசத்தை விட்டு போகவேண்டிய கட்டாயத்தினை காலம் எங்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்றது. 

ஆகையினாலே மீதி இருக்கின்ற நாங்கள் வளர்ந்துவரும் இந்த இளம் சமுதாயத்திற்கு தலைமை தாங்குகின்ற இரட்டிப்பான பொறுப்பை எங்கள் தோளிலே சுமந்திருக்கின்றோம். 

ஆகையினாலேதான் இங்கே கூடியிருக்கும் அரசியல் .அரசாங்கம், அரசு என்ற மூன்று பகுதியையுடைய பிரதிநிதிகளையும் உத்தியோகத்தர்கள் மற்றும் ஏற்பாட்டாளர்கள். வெவ்வேறு பகுதிகளில் கடமையாற்றிக் கொண்டிருந்தாலும் தமிழரை பொறுத்தவரையில் இருப்பது ஓரு தேசம், இருப்பது ஒரு எதிர்காலம் கட்டவேண்டியது ஒரு சமுதாயம் ஆகையினாலே கட்டியமைக்கவேண்டிய அந்த சமுதாயத்திற்கான குறைந்தது குறிப்பிட்ட காலத்திற்காவது உங்கள் வேற்றுமைகளை விட்டு எங்கள் மக்களுக்காக பணிபுரியுங்களென்று தாழ்மையுடன் நான் கேட்டுக்கொள்வதுடன் அதுவே இந்த தமிழ் சிங்கள சித்திரை புத்தாண்டில் நாங்கள் எடுத்துக்கொள்ளக்கூடிய திடமான தீர்மானம் ஆகுமென்று ஆளுநர் இதன்போது தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53