கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா; திருநங்கைகள் ஒப்பாரி

Published By: Daya

18 Apr, 2019 | 02:57 PM
image

கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழாவில் திருநங்கைகள் கலந்து கொண்டு பூசாரி கையால் தாலிக் கட்டிக்கொண்டு ஆடிபாடி மகிழ்ந்து  பின்னர் திருநங்கைகள் நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்து ஒப்பாரிவைத்து அழுந்து கொண்டு  வீடுதிரும்புவது  இந்த விழாவின் பாரம்பரியமாகும். 

விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை திருவிழா ஆண்டு தோறும் வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு சித்திரை திருவிழா கடந்த இரண்டாம் திகதி சாகை வார்த்தல் நிகழ்ச்சியுடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை திருநங்கைகள் தாலி கட்டும்நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழகம், மும்பை, கல்கத்தா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான திருநங்கைகள் கலந்து கொண்டனர்.

திருநங்கைகள் புதுப்பெண்கள் போல அலங்கரித்து, பின்னர் பூசாரி கையால் தாலி கட்டிக் கொண்டனர். கூத்தாண்டவரை கணவராக நினைத்து அவரின் அருமை பெருமைகளை குறித்து இரவு முழுவதும் ஆடிப்பாடி மகிழ்ந்தனர். 

நிகழ்ச்சியைத் தொடர்ந்து  நேற்று புதன்கிழமை காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெற்றது. தேரோட்டத்தை உளுந்தூர் பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு தொடங்கி வைத்தார். தேர் கோவிலில் இருந்து புறப்பட்டு மாட வீதிகள் வழியாக 11 மணியளவில் பந்தலடி வந்தது. பின்னர் அரவான் களப்பலி இடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதனையடுத்து திருநங்கைகள் பூசாரியின் கையால் தாலி அறுத்து எறிந்தனர். பூக்களைப் பிய்த்து வீசி, நெற்றியில் உள்ள குங்குமத்தை அழித்தனர். ஓப்பாரி வைத்து அழுதனர். பின்னர் அருகில் உள்ள கிணற்றில் குளித்துவிட்டு வெள்ளை புடவை அணிந்து கொண்டு சோகத்துடன் சொந்த ஊருக்கு புறப்பட்டனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென் ஆபிரிக்க முன்னாள் ஜனாதிபதி ஸுமா...

2024-03-29 12:42:02
news-image

இஸ்ரேலின் தாக்குதலில் 36 சிரிய இராணுவத்தினர்...

2024-03-29 11:21:33
news-image

காசாவிற்கு தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துகளையும்...

2024-03-29 10:23:49
news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 12:25:44
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47