மஹியங்கனை விபத்து : மற்றுமொரு அதிர்ச்சி செய்தி : 20 வருடங்களுக்கு பின்னர் நாடு திரும்பியவரும் பலியான சோகம் -(காணொளி)

18 Apr, 2019 | 02:17 PM
image

மஹியங்கனையில் நேற்று அதிகாலை இடம்பெற்ற கோர விபத்து நாட்டு மக்களையே சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் இவ்விபத்து தொடர்பில் மற்றுமொரு சோகச் செய்தி வெளியாகியுள்ளது.

மஹியங்கனை - பதுளை பிரதான வீதியில்  மஹியங்கனை தேசிய பாடசாலைக்கு முன்பாக நேற்று அதிகாலை  இடம்பெற்ற  வாகன விபத்தில் 3 சிறுவர்கள் உட்பட  10 பேர் பரிதாபமாக உயிரிழந்திருந்தனர்.

உயிரிழந்த இவர்களில் வெளிநாட்டில் 20 வருடங்களாக பணியாற்றிவிட்டு நாடு திரும்பியிருந்த நபர் ஒருவரும் நேற்றைய விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்த செய்தி தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான ஜோஷப் ரெலின்டன் ஓமானில் கடந்த 20 வருடங்களாக பணியாற்றி வந்த நிலையில் கடந்த 13ஆம் திகதி நாடு திரும்பியுள்ளார்.

நீண்ட வருடங்களின் பின்னர் நாடு திரும்பிய தனது குடும்ப உறுப்பினரை அழைத்துச் செல்வதற்காக குடும்பத்தார் அனைவரும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கடந்த 13 ஆம் திகதி வந்துள்ளனர்.

பின்னர் ஜோஷப் ரெலின்டனை அழைத்துக்கொண்டு தெஹிவளையில் உள்ள உறவினர் ஒருவரின் வீட்டுக்கு சென்று தங்கியுள்ளனர்.

இதனையடுத்து  கடந்த திங்களன்று  இரவு ஜா-எல பகுதிக்கு   தமது உறவினர் வீடொன்றுக்கு வந்துள்ளனர்.  அதன் பின்னர் அங்கு இருந்து உறவுக்கார சிறுமி ஒருவரையும் அழைத்துக்கொண்டு  கண்டி, நுவரெலியா பகுதிக்கு சுற்றுலா சென்றுள்ளனர். 

சுற்றுலா சென்று  மட்டக்களப்பில் உள்ள தமது வீடு நோக்கி செல்லும் போதே விபத்துக்கு முகம் கொடுத்துள்ளனர். 

உயிரிழந்தவர்களின் விபரம்

மட்டக்களப்பை சேர்ந்த 56 வயதான  ஜோஷப் ரெலின்டன் ( 20 வருடங்களின் பின்னர் நாடு திரும்பியவர்), அவரது மனைவியான  50 வயதுடைய சில்வியா ஜோஷப்  மட்டக்களப்பு டச் பார் பகுதியைச் சேர்ந்த 32 வயதான  லிஸ்டர்  அலக்ஸ்சாண்டர்,  அவரது மனைவியான 27 வயதுடைய  நிசாலினி அலக்ஸ்சாண்டர்,  அவர்களின் இரட்டை மக்ள்களான 4 வயதினை உடைய  ஹனாலி அலக்ஸ்ஸாண்டர் , பைகா அலக்ஸ்சாண்டர்,  மட்டக்களப்பு ரத்னம் வீதியைச் சேர்ந்த 48 வயதான  யூட் பிரின்ஸ் ஹென்றிக் அவரது  மனைவி 42 வயதான மரியா பிரன்சியா ஹென்றிக் அவர்களது 10 வயது மகளான செரபி ஹென்ரிக் 19 வயது மகனான யூட் பிரின்ஸ் ஹெய்ட் ஹென்றிக்  ஆகியோரே உயிரிழந்தவ்ர்களாவர். விபத்தின் போது 19 வயது  யூட் பிரின்ஸ் ஹெய்ட் ஹென்றிக் என்பவரே வேனை செலுத்தியுள்ளார்.

சிகிச்சை பெறுபவர்கள்:

இதற்கு மேலதிகமாக காயமடைந்த இருவரில் ஒருவர் ஜா-எல பகுதியைச் சேர்ந்த 16 வயதான ரொஷானி பர்கசால்  எனும் சிறுமி எனவும் மற்றையவர் உயிரிழந்த  யூட் பிரின்ஸ் ஹென்ரிக் மற்றும் மரியா பிரின்சியா ஹென்ரிக் ஆகியோரின் 13 வயதான மகள்  ஷெஹானி ஹென்ரிக் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட பெண் கைது!

2024-03-19 11:57:01
news-image

வெடுக்குநாறிமலையில் கைதான 8 பேரும் விடுதலை...

2024-03-19 11:21:15
news-image

வெடுக்குநாறிமலை கைது விவகாரம் -நாடாளுமன்றத்தில் தமிழ்...

2024-03-19 11:11:26
news-image

கெஹலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராக்கியபோது பயன்படுத்திய...

2024-03-19 11:08:51
news-image

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து ;...

2024-03-19 10:52:08
news-image

ஒருவர் தீவைத்துக் கொலை: எல்ல பொலிஸாரால்...

2024-03-19 10:28:29
news-image

ஊதா நிற இலை வடிவ முகம்...

2024-03-19 10:39:58
news-image

முதலில் ஜனாதிபதி தேர்தல் - அமைச்சர்களிடம்...

2024-03-19 09:54:32
news-image

அதிக வெப்பநிலையால் விலங்குகளுக்கும் பாதிப்பாம்!

2024-03-19 10:01:21
news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:45:20
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26