கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 2 பெண்கள்  வெடிவிபத்தில் படுகாயம்

Published By: Digital Desk 4

17 Apr, 2019 | 06:31 PM
image

யாழ்ப்பாணம் முகமாலையில் இன்று காலை 9 மணியளவில் இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்தில் இளம் தாயார் உட்பட இரு பெண்கள்  படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Image result for  கண்ணிவெடி வெடிவிபத்து

முகமாலை பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு பெண்களே இந்த வெடிவிபத்தில் படுகாயமடைந்தனர்.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

இன்று காலை முகமாலை பகுதியில் இராணுவத்தினர் ஆக்கிரமித்திருக்கும் பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.

இதன்போது ஏதிர்பாராத விதமாக புதைக்கப்பட்டிருந்த கண்ணிவெடி ஒன்று வெடித்து சிதறியது.

இதில் பரந்தனை சேர்ந்த 6 வயதுப் பிள்ளையின் தாயாரான குனேந்திரன் ரேணுகா (வயது-25) என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

இவரிற்கு அருகில் நின்ற இன்னொரு பெண் உத்தியோகத்தர் மேகலதா என்பவரும் காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

சம்பவத்தை அடுத்து இருவரும் ஆரம்ப முதலுதவிகளுக்கு பின்னர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவருக்கும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்பட்டது.

முகம் மற்றும் நெஞ்சு பகுதிகளை பாதுகாக்கவே கவசங்கள் அணியப்படுவதாகவும் கைகளை பாதுகாக்க போதுமான உபகரணங்கள் பயன்படுத்தப்படுவதில்லை எனவும் விசாரணைகளில் தெரியவருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31