அனிமியா எனும் இரும்புச்சத்து குறைபாடு...!

Published By: Digital Desk 4

17 Apr, 2019 | 04:02 PM
image

காசநோயாளிகளை கண்டறியும் பொழுது அவர்கள் அனிமீயா எனப்படும் இரும்புச் சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது ஆய்வின் மூலம் தெரிய வருகிறது. 

அத்துடன் உடலில் இரும்புச் சத்து போதிய அளவிற்கு இல்லை என்றால் அவர்களுக்கு காசநோயைத் தவிர ஏனைய நோய்கள் வருவதற்கான சாத்தியக்கூறு அதிகம் என்றும் வைத்தியர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள். உணவுக்கட்டுப்பாட்டை கடைபிடிப்பவர்களில் சிலருக்கு இரும்பு சத்து குறைபாடு இருப்பதும் கண்டறியப்பட்டிருக்கிறது. அதனால் வைத்தியர்கள் மற்றும் ஊட்டச்சத்து நிபுணர்களின் அறிவுரை மற்றும் வழிகாட்டல் இன்றி உணவுக்கட்டுப்பாட்டை  கடைபிடிக்கவேண்டாம்.

ஏனைய சத்துக்குறைபாடுகளுக்கும் இரும்புச்சத்துக் குறைபாட்டுக்கும் இடையே வேறுபாடு உள்ளதாகவும், இரும்புச் சத்து குறைபாடு உள்ளவர்கள் வேறு வகையினதான உடலியல் பாதிப்புகளுக்கு விரைவில் ஆளாகிறார்கள்.

சோர்வு, பலவீனம், வெளிறிய தோல், மூச்சு குறைபாடு, தலைசுற்றல், கால்கள் நடக்கும் போது பின்னிக் கொள்ளுதல், நாவறட்சி, உள்ளங்கைகளிலும், உள் பாதங்களிலும் குளிர்ந்து இருப்பது, குறைவாகவோ அல்லது அளவுக்கு அதிகமாகவோ இதயத்துடிப்பு இருப்பது, உடையக் கூடிய அளவில் நகங்கள் இருப்பது, தலைவலி ஆகியவற்றை உடலில் இரும்பு சத்து போதிய அளவிற்கு இல்லை என்பதன் அறிகுறியாக எடுத்துக் கொண்டு உடனடியாக சிகிச்சை பெற வேண்டும்.

தெற்காசியாவைப் பொறுத்தவரை தற்போதுள்ள அனிமியா நோயாளிகளை விட 2040 ஆம் ஆண்டில் இரண்டு மடங்கு நோயாளிகள் இருப்பார்கள் என்று அவதானிக்கப்பட்டிருக்கின்றது. இதனை உங்களுடைய உணவு முறைகளின் மூலம், உணவு பழக்க வழக்கத்தை மாற்றி அமைத்துக் கொள்வதன் மூலம் தற்காத்துக் கொள்ள முடியும்.

இரும்பு சத்து நிறைந்த காய்கறிகளையும், பயறு வகைகளையும், பீன்ஸ் போன்றவற்றையும் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதேபோல் விற்றமின் சி சத்து அடங்கிய பானங்களை பருகினாலும் எம்முடைய உடல் அதிலிருந்து இரும்பு சத்தை கிரகித்து கொள்ளும். சாப்பிட்டு முடித்தவுடன் தேநீர் அல்லது கோப்பி அருந்துவதை முற்றாக தவிர்த்து விடுங்கள். 

ஏனெனில் இவை உணவிலிருந்து இரும்பு சத்து உட்கிரகிப்பதை தடை செய்கிறது. கர்ப்பிணி பெண்கள் வைத்தியரின் ஆலோசனையுடன் விற்றமின் பி12, போலிக் அமிலச்சத்து போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

வைத்தியர் ; அனந்தகிருஷ்ணன்.

தொகுப்பு அனுஷா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04