கற்றாழை பிடுங்குவதற்கு பிரதேச சபையால் தடை விதிப்பு

Published By: R. Kalaichelvan

17 Apr, 2019 | 03:09 PM
image

மன்னார் வங்காலை கற்றாளம் பிட்டிப் பகுதியில் கற்றாழைச் செடிகளை பிடுங்குவதை நானாட்டான் பிரதேச சபை தடை விதித்துள்ளது.

கடந்த சில ஆண்டுகளாக மன்னார் நானட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட வங்காலை கற்றாளம் பிட்டி பகுதியில் காணப்படும் கற்றாழைகளை சட்ட விரோதமாக மூட்டை மூட்டையாக  அகழ்வு செய்யப்பட்டு தென்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டது.

எனினும் கற்றாழை அகழ்வுகளில் ஈடுபடுபவர்கள் வங்காலை கிராம மக்களினால் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

எனினும் தொடர்ச்சியாக கற்றாழை செடிகள் சட்ட விரோதமான முறையில் அகழ்வு செய்யப்பட்டு வருகின்றது.

இந்த நிலையில் அண்மையில் இடம் பெற்ற நானாட்டான் பிரதேச சபையின் மாதாந்த அமர்வில் நானாட்டான் பிரதேச சபை உறுப்பினர் ஞானராஜ் சோசை அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையின் அடைப்படையில் வங்காலை கற்றாளம் பிட்டி பகுதியில் கற்றாழை அகழ்வுக்கு தடை விதிக்கப்பட்டது.

குறித்த தடை தொடர்பாக மும்மொழியினாலான அறிவித்தல் பலகை நானாட்டான் பிரதேச சபையால் இயற்கையாக கற்றாழை செடிகள் காணப்படும் பிரதேசமான வங்காலை கற்றாளம் பிட்டி பகுதியில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் மன்னாரில் உள்ள எருக்கலம் பிட்டி ,சாந்திபுரம் , தாராபுரம் போன்ற பகுதிகளிலும் சட்ட விரோதமான கற்றாழை அகழ்வுகள் இடம் பெற்று வருகின்றது.

 எனவே சட்ட விரோத கற்றாழை அகழ்வு இடம் பெறும் அனைத்து பகுதிகளிலும் மும் மொழியிலான அறிவித்தல் பலகைகளை காட்சி படுத்துமாறு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59
news-image

மாஓயாவில் நீராட சென்ற 4 மாணவர்கள்...

2024-03-28 09:50:11