பறவை தாக்கி முதியவர் பலி !

Published By: Digital Desk 3

17 Apr, 2019 | 12:33 PM
image

அமெரிக்காவில் செல்லப்பிராணியாக வளர்த்த ஈமு கோழி இனத்தை சேர்ந்த கஸ்சோவாரி என்ற பறவை தாக்கியதில் முதியவர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்தவர் மார்வின் ஹஜோஸ் (வயது 75). இவர் பிராணிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டதால் தனது வீட்டில் கவர்ச்சிகரமான விலங்குகள் மற்றும் பறவைகளை செல்லப்பிராணிகளாக வளர்த்து வந்தார்.

அந்த வகையில் ஈமு கோழி இனத்தை சேர்ந்த கஸ்சோவாரி என்கிற பறவையை அவரது வீட்டில் வளர்ந்து வந்தார். இது உலகின் மிகப்பெரிய மற்றும் அதிக எடைகொண்ட பறவை இனங்களில் ஒன்றாகும்.

இந்த வகை பறவைகள் அதிகபட்சமாக 45 கிலோ எடையில் இருக்கும். பறக்கும் திறனற்ற இந்த பறவையின் கால் நகங்கள் மற்றும் அலகு மிகவும் கூர்மையானதாக இருக்கும். உலகின் மிகவும் ஆபத்தான பறவை இதுவாகும்.

இந்த நிலையில், சம்பவ தினத்தன்று மேர்வின் ஹஜோஸ், அந்த பறவைக்கு இரை வைப்பதற்காக சென்றபோது, எதிர்பாராதவிதமாக கால் இடறி கீழே விழுந்தார். அப்போது அவரை அந்த பறவை தனது நகங்களாலும், அலகாலும் பயங்கரமாக தாக்கியது.

இதில் பலத்த காயம் அடைந்த அவர் மீட்கப்பட்டு அருகில் உள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிழந்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17
news-image

பாக்கிஸ்தானில் தற்கொலை குண்டுதாக்குதல் - ஐந்து...

2024-03-26 17:42:13