அரசாங்கம் தோட்ட தொழிலாளர்களை ஏமாற்றியுள்ளது: 83 ரூபா 50 சத­மே அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது

Published By: MD.Lucias

21 Apr, 2016 | 09:16 AM
image

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 2500 ரூபா சம்­பள உயர்வை அதி­க­ரித்­துள்­ள­தாக கூறி அரசு தோட்ட தொழி­லா­ளர்­களை ஏமாற்­றி­யுள்­ளது. ஒரு நாள் சம்­ப­ள­மாக 83 ரூபா 50 சத­மே அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­டயம் தொடர்­பாக அமைச்­சர்­க­ளான திகாம்­பரம், மனோ கணேசன்  இராதாகிருஸ்ணன் ஆகியோர் பிர­த­மரை பாராட்ட போகி­றார்­களா? அல்­லது எதிர்ப்பு தெரி­வித்து அறிக்கை விடுக்க போகி­றார்­களா என முன்னாள் அமைச்சர் பேரா­சி­ரியர் திஸ்ஸ வி­தா­ரன கேள்வி எழுப்­பி­யுள்ளார். தோட்டத் தொழி­லா­ளர்­களின் சம்­பள விடயம் தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையிலே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில் 

தோட்டத் தொழி­லா­ளர்­க­ளுக்கு 2500 ரூபா சம்­பள உயர்வை அதி­க­ரித்­துள்­ள­தாக கூறி அரசு தோட்ட தொழி­லா­ளர்­களை ஏமாற்­றி­யுள்­ளது. ஒரு நாள் சம்­ப­ள­மாக 83 ரூபா 50 சத­மே அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. அர­சியல் இலா­பத்­திற்­காக அர­சாங்­கத்தில் அங்கம் வகிக்கும் அமைச்­சர்­க­ளான திகாம்­பரம், மனோ கணேசன், இராதாகிருஸ்ணன் போன்­ற­வர்கள் இதற்கு சொல்லப் போவது என்ன.

பிர­தமர் ரணில் தோட்ட தொழி­லா­ளர்­க­ளுக்கு 1000 ஆயிரம் ரூபா சம்­பள உயர்வை பெற்றுக் கொடுக்க முயற்சி செய்­வ­தாக கூறி ஊட­கங்கள் மூலம் பாராட்டி அறிக்கை விடுத்­தார்கள். ஆனால் பிர­தமர் தலை­யீட்டின் மூலம் 83.50 சதம் சம்­பளம் மட்டும் தான் அதி­க­ரிக்­கப்­பட்­டுள்­ளது. இவ்­வி­டயம் தொடர்­பாக அமைச்­சர்­க­ளான திகா, மனோ, இராதா கிருஸ்ணன் ஆகியோர் பிர­த­மரை பாராட்ட போகி­றார்­களா? அல்­லது எதிர்ப்பு தெரி­வித்து அறிக்கை விடுக்­க­வுள்­ளார்­களா என கேட்க விரும்­பு­கிறேன்.

தோட்டத் தொழி­லா­ளர்கள் அன்­றாட உண­விற்கு அதி­க­மாக பயன்­ப­டுத்தும் மாவின் விலையை அரசு அதி­க­ரித்­துள்­ளது. இது தொடர்­பாக அர­சாங்­கத்தில் உள்ள மலை­ய­கத்தில் உள்ள அமைச்­சர்கள் அதற்கு எதி­ராக அறிக்கை விடுக்­காமல் மௌனம் காத்து வரு­கின்­றனர். இவ்­வா­றான அர­சி­யல்­வா­திகள் யார் என்­பதை தொழி­லா­ளர்கள் புரிந்­து­கொள்ள வேண்டும்.

இந்த அரசை பத­வியில் அமர்த்த மலை­யக மக்கள் பெரும் ஆத­ரவை வழங்­கி­னார்கள். ஆனால் அம் மக்­களை ஏமாற்றி வரு­கின்­றது. மலை­ய­கத்தில் வீட­மைப்பு திட்­டங்­களை உரு­வாக்கப் போவ­தாக அரசு கூறு­கின்­றது. அதன் காரணம் 1983 ஆம் ஆண்டு ஐ.தே.க. ஆட்­சியில் தமி­ழர்கள் மீது தாக்­குதல் நடத்தி அம் மக்களின் சொத்துக்கள் அழிக்கப்பட்டு வீடுகள் தீ வைக்கப்பட்டன. அதன் பாவங்களை கழுவுவதற்குத்தான் வீடமைப்புத் திட்டங்கள் அமுல்படுத்தப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கொழும்பு - புறக்கோட்டையில் அனுமதியற்ற கடைகளை...

2024-04-20 11:30:37
news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09