மரத்தில் தொங்கிய நிலையில் கூலித்தொழிலாளி சடலமாக மீட்பு

Published By: Digital Desk 4

17 Apr, 2019 | 12:14 PM
image

வவுணதீவு பொலிஸ் பிரிவு, குருந்தையடி முன்மாரி, காஞ்சிரங்குடா கிராமத்திலுள்ள மாமரமொன்றியிலிருந்து கூலித் தொழிலாளியான ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று செவ்யாக்கிழமை (16.04.2019) சடலமாக மீட்கப்பட்ட நபர் 3 பிள்ளைகளின் தந்தையான  கதிர்காமத்தம்பி தருமலிங்கம் (வயது 40) என்பவருடையது என அவரது மனைவி பொலிஸாரிடம் அடையாளம் காட்டியுள்ளார்.

தனது மகள் பாடசாலைச் சுற்றுலா செல்வதற்காக உணவு தயாரித்து ஏற்ற ஒழுங்குகளைச் செய்ய வேண்டும் என்ற நோக்கில் தான் அதிகாலை 2 மணியளவில் எழுந்து வீட்டுக் கதவைத் திறந்து பார்த்தபோது வீட்டு வளவிலுள்ள மாமரக் கிளையில் தனது கணவர் சடலமாகத் தொங்கிக் கொண்டிருந்ததாகவும் மனைவி பொலிஸ் வாக்கு மூலத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

இவர் புதுவருட மகிழ்ச்சியை கொண்டாடும் வகையில் அதிக மதுபோதைக்குட்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் உடற் கூராய்வுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பரிசோதனை, விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22