மாகந்துரே மதூஷின் உறவினர் உட்பட 6 பேர் நாடுகடத்தப்பட்டனர்

Published By: Priyatharshan

17 Apr, 2019 | 09:07 AM
image

போதைப்பொருள் கடத்தல் மற்றும் வியாபாரம் தொடர்பில் டுபாயில் மாகந்துரே மதூஷுடன் கைதுசெய்யப்பட்டு அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் மேலும் 6 பேர் இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டுள்ளனர்.

இவ்வாறு நாடுகடத்தப்பட்ட 6 பேரில் ஒருவர் மாகந்துரே மதூஷின் உறவினர் என குற்றப்புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்தனர்.

குறித்த 6 பேரும் இன்று அதிகாலை 4.45 மணிக்கு டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தபோது குற்றப் புலனாய்வுப் பிரிவினர் அவர்களை பொறுபேற்றுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

டுபாயில் இருந்து செனவிரத்ன மாவத்தகே தயான் புத்திம பெரேரா, மொஹமட் பதியுதீன் மொஹமட் ரியாஷ், ரணசிங்ககே சுரேஷ் லசந்த, யோன் மெரங்க சைமன் ஹேவகே ரூபதாச, மொஹமட் ஜபீர் மொஹமட் ஹிப்ரே, சமரசிங்ககே நிலான் ரொமேஷ் ஆகியோரே இலங்கைக்கு நாடுகடத்தப்பட்டவர்களாவர். 

இந்நிலையில் கடந்த காலங்களில் மாகந்துரே மதூஷுடன் கைதானவர்களுள் 15 பேர் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட நிலையில், இன்று மேலும் 6 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, டுபாயில் வைத்து மாகந்துரே மதூஷுடன் 21 பேர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்களின் துயரங்களிற்கு தீர்வை காண்பதற்கு நாட்டின்...

2024-03-28 14:20:44
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51
news-image

கூரகல பள்ளிவாசல் விவகாரம் : கலகொட...

2024-03-28 11:03:40
news-image

மட்டக்களப்பு - களுவாஞ்சிகுடியில் விபத்தில் மாணவர்...

2024-03-28 11:01:55
news-image

இறக்குமதி செய்யப்படும் அரிசி, பெரிய வெங்காயத்தின்...

2024-03-28 10:40:46
news-image

பாதாள உலக நபருக்கு ஆதரவாக செயற்பட்ட...

2024-03-28 10:45:32
news-image

பாதாள உலகக் குழுக்களை சேர்ந்த 10...

2024-03-28 10:21:44
news-image

வடக்கில் 50 ஆயிரம் சூரிய மின்...

2024-03-28 09:56:59