ஜனாதிபதித் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டும் - அஜித் மான்னப்பெரும 

Published By: Daya

16 Apr, 2019 | 05:28 PM
image

(நா.தினுஷா) 

இந்த ஆண்டின் இறுதியில் நிச்சயமாக ஜனாதிபதித் தேர்தல் நடத்தப்படும். அதற்கான உரிய காலமும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. எனவே ஜனாதிபதித் தேர்தலில் இருந்து தப்பிக்கவோ அல்லது தேர்தலை உரியகாலத்தில் நடத்துவதை தடுத்து நிறுத்தவோ எவராலும் முடியாது என மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் இராஜாங்க அமைச்சர் அஜித் மான்னப்பெரும தெரிவித்தார்.

கடந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் புதிய தேர்தல் முறைமைக்கு அமைவாக நடத்தப்பட்டமையினால் உள்ளூராட்சிமன்றங்களின் உறுப்பினர்களின் அதிகரிப்புடன் செலவுகளும் பிரச்சினைகளும் அதிகரித்திருந்தன. இந்த நிலையை எதிர்வரும் மாகாண சபைகளுக்கான தேர்தலின் போது இடமளிக்க முடியாது.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபை தேர்தலை நடத்த வேண்டியுள்ளதை மறந்துவிடக் கூடாது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாண சபைகளுக்கான தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதே அரசாங்கத்தின் எதிர்பார்பார்ப்பாக காணப்படுகின்றது. ஐக்கிய தேசிய கட்சியும் இந்த நிலைப்பாட்டிலேயே உள்ளது.

 

அரசியல் நெருக்கடி நிலைமையின் பின்னர் மாகாண சபை தேர்தல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டு போயிருந்தன.

இருப்பினும் தற்போது ஜனாதிபதித் தேர்தலையும் உடனடியாக நடத்த வேண்டியது அவசியமாகும். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னரோ அல்லது தேர்தலின் பின்னரோ மாகாண சபைகளுக்கான தேர்தல் இடம்பெறுமாக இருந்தால் அது நிச்சியமாக புதிய முறையில் நடத்தப்பட வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

                                       

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58
news-image

வவுனியாவில் பாலித தெவரப்பெருமவுக்கு இளைஞர்கள் அஞ்சலி

2024-04-19 03:04:14
news-image

யாழ்ப்பாணத்தில் மனைவியை கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-19 02:29:42
news-image

வெற்றுக் காணியில் வைத்திய கழிவுகளை கொட்டும்...

2024-04-19 02:24:21
news-image

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது...

2024-04-19 02:19:10
news-image

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை...

2024-04-19 02:01:40