நாடு­பூ­ரா­கவும் வைத்­தி­யர்கள் வெற்­றி­ட­மா­க­வுள்ள பட்­டியல் சுகா­தார அமைச்சின் வைத்­திய சேவை பணிப்­பா­ள­ரினால் தன்­னிச்­சை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது என அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் அறி­வித்­தது. சுகா­தார அமைச்­ச­ருக்கும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­துக்கும் இடையில் முரண்­பாட்டை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கா­கவே இது மேற்­கொள்­ளப்­பட்­டுள்­ளது எனவும் தெரி­வித்­தது.

அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் நேற்று முன்தினம் கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே சங்­கத்தின் செய­லாளர் டாக்டர் நளிந்த ஹேரத் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில், வைத்­தி­யர்­களின் நிய­மனம் மற்றும் இட­மாற்­றங்கள் மிகவும் முறை­யா­கவும் ஒழுங்கு விதியின் அடிப்ப­டை­யிலும் இடம்­பெற்­றுள்­ளது. வைத்­திய மாண­வர்கள் தங்­க­ளது இறுதிப் பரீட்­சையில் வெளிப்படுத்தும் திற­மை­யின் அடிப்­ப­டையில் முன்­னிலை பட்­டியல் தயா­ரிக்­கப்­ப­டு­கின்­றது. இதில் எந்த அர­சியல் தலை­யீடோ அல்­லது வேறு அழுத்­தங்­க­ளுக்­க­மை­யவோ மாற்­றங்கள் இடம்­பெ­றாது. அத்­துடன் நிய­ம­னங்கள் மற்றும் இட­மாற்­றங்­க­ளுக்கு அர­சி­யல்­வா­தி­களின் பின்னால் செல்ல தேவையில்லையென்பதால் அதி­க­மா­ன­வர்கள் வைத்­தியத்துறையை விரும்­பு­கின்­றனர்.

அதே­போன்று வைத்­திய பட்­டப்­ப­டிப்பை முடித்­துக்­கொண்ட 90 வீத­மா­ன­வர்கள் தங்­க­ளது நிய­ம­னங்­களை கௌர­வ­மான முறையில் பெற்­றுக்­கொண்டு சுயா­தீ­ன­மாக தொழிலை மேற்­கொண்டு செல்ல முடியும் என்­ப­தா­லேயே நாட்­டுக்குள் தங்கி இருக்­கின்­றனர். அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் தொழிற்­சங்­க­மாக இட­மாற்ற சபையில் அங்­கத்­துவம் வகித்து இந்த நிய­மனம் மற்றும் இட­மாற்றப் பட்­டி­யலை முறை­யாக தயா­ரிப்­ப­தற்­காக ஒத்­து­ழைப்பு வழங்­கு­வது இந்த தொழிலின் சுயா­தீ­னத்­தன்­மையை பாது­காப்­ப­தற்­காகும். இறு­தியில் இதன் நன்­மைகள் நாட்­டு­மக்­க­ளுக்கே கிடைக்­கின்­றன. அந்த வகையில் 2016ஆம் ஆண்டு பயிற்­சியை முடித்­துக்­கொண்­ட­வர்­க­ளுக்­கான நிய­மனம் வழங்­கு­வ­தற்கு வைத்­தி­ய­சா­லை­களில் இருக்கும் வெற்­றி­டங்­களை வைத்­தி­ய­சாலை பணிப்­பாளர், சுகா­தார அமைச்சு மற்றும் அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்கம் ஆகி­யன இணைந்து வெற்­றி­ட­மா­க­வுள்ள பட்­டியல் தயா­ரிக்­கப்­பட்­டது. இங்கு நாடு­பூ­ரா­கவும் ஆரோக்­கி­ய­மான வைத்­தி­ய­சே­வையை சமாந்­த­ர­மாக மேற்­கொள்­வ­தற்கு விசே­ட­மாக கவனம் செலுத்­தப்­பட்­டது.

என்­றாலும் இந்த வைத்­தியர் வெற்­றிட பட்­டியல் சுகா­தார அமைச்சின் வைத்­திய சேவை பணிப்­பா­ள­ரினால் தன்­னிச்­சை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அமைச்­சரின் மக்கள் தொடர்­பாடல் அதி­காரி ஒரு­வரின் தேவையை நிறை­வேற்­று­வ­தற்கே பணிப்­பாளர் இவ்­வாறு நடந்து கொண்­டுள்ளார். இந்த நபர் சுகா­தார அமைச்­ச­ருக்கு தவ­றான தக­வல்­களை வழங்கி அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்­துடன் முரண்­பாட்டை ஏற்­ப­டுத்தும் நோக்­குடன் இதனை மேற்­கொண்­டுள்ளார்.

அத்­துடன் பணிப்­பா­ள­ரினால் தன்­னிச்­சை­யாக தயா­ரிக்­கப்­பட்ட வைத்­தியர் வெற்­றிடப் பட்­டி­ய­லுக்கு அரச வைத்­திய அதி­கா­ரிகள் சங்­கத்தின் கிளை சங்­கங்கள் பாரிய எதிர்ப்­பினை தெரி­வித்து வரு­கின்­றன. இந்த நிலை­மையை உட­ன­டி­யாக திருத்­தி­ய­மைக்­கா­விட்டால் எதிர்­வரும் தினங்­களில் எமது கிளை சங்­கங்கள் மேற்­கொள்ளும் பணி பகிஷ்­க­ரிப்பு போராட்­டங்­க­ளினால் நோயா­ளர்­க­ளுக்கு ஏற்­படும் அசௌ­க­ரி­யங்கள் தொடர்­பான பொறுப்பை சுகாதார அமைச்சின் குறிப்பிட்ட பணிப்பாளர் ஏற்றுக்கொள்ள வேண்டும். எனவே இது தொடர்பாக சுகாதார அமைச்சர் கவனம் செலுத்தி எங்களால் கையளிக்கப்பட்ட வைத்தியர் வெற்றிடத்திற்கமைய நியமனங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் வைத்தியர்களின் நியமனம் மற்றும் இடமாற்றங்களில் அரசியல் தலையீடுகள் மற்றும் அழுத்தங்கள் என்பனவற்றுக்கு ஒருபோதும் இடமளிக்க மாட்டோம் என்றார்.