ஜின்ரெக் இர­சா­யன பகுப்­பாய்வு நிறுவனத்தின் அதி­கா­ரியை மன்றில் ஆஜ­ரா­கு­மாறு உத்­த­ரவு.!

Published By: Robert

21 Apr, 2016 | 08:58 AM
image

புங்­கு­டு­தீவு பாட­சாலை மாணவி வித்­தி­யாவின் படு­கொலை தொடர்­பான மர­பணு அறிக்­கை­களை ஆய்வு செய்யும் ஜின்ரெக் இர­சா­யன பகுப்­பாய்வு நிறுவனத்தின் அதி­கா­ரியை அடுத்த வழக்குத் தவ­ணை­யின்­போது மன்றில் ஆஜ­ராக வேண்­டு­மெ­ன்றும் அத்­துடன் இக்­கொலை தொடர்­பான விசா­ரணை அறிக்­கை­களை குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வினர் பூரணப்படுத்த வேண்டும் என்றும் ஊர்­கா­வற்­றுறை நீதிவான் வை.எம்.றியால் உத்­த­ர­விட்­டுள்ளார்.

மாண­வியின் படு­கொலை தொடர்பில் நேரில் பார்த்த சாட்­சியம் உட்­பட மேலும் ஒரு­வ­ரு­மாக 11ஆவது, 12ஆவது சந்­தேக நபர்கள் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டி­ருந்­தனர். இந்­நி­லை யில் இவர்கள் தொடர்­பான வழக்கு விசா­ரணை நேற்­றைய தினம் ஊர்­கா­வற்­றுறை நீதி­மன்றில் எடுத்துக் கொள்­ளப்­பட்­ட­போதே அவர் இவ் உத்­த­ரவைப் பிறப்­பித்தார்.

மேலும் நேற்­றைய வழக்கு விசா­ர­ணை­யின்­போது,

மாண­வியின் படு­கொ­லையை நேரில் பார்த்த சந்­தேக நப­ரான தரு­ம­லிங்கம் ரவீந்­தி­ர­னிடம் வாக்கு மூலத்தை பதிவு செய்யும் வகையில் நீதிவான் அவ­ரிடம் 2ஆம், 3ஆம் சந்­தேக நபர்கள் உங்­களை குறித்த மாணவி பாட­சாலை செல்­கி­றாரா என பார்க்கச் சொன்­னார்­களா? என வின­வினார். இதற்கு குறித்த சந்­தேக நபர் இல்லை என பதி­ல­ளித்­தி­ருந்தார்.

இத­னை­ய­டுத்து இவர்கள் தொடர்­பான விசா­ர­ணையைத் தொடர்ந்து மேற்­கொள்­ளு­மாறு நீதிவான் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வுக்கு உத்­த­ர­விட்டார்.

அத்­துடன் குற்­றப்­பு­ல­னாய்வு பிரி­விடம் மர­பணு அறிக்­கைகள் இன்­னமும் மன்றில் சமர்ப்­பிக்­கப்­ப­டாமை குறித்து நீதிவான் வினவி­யி­ருந்தார்.

இதற்குப் பதி­ல­ளித்த குற்­றப்­பு­ல­னாய்வு பிரிவு சார்­பாக மன்றில் ஆஜ­ராகி இருந்த அதி­காரி, குறித்த கொலை தொடர்­பாக சேக­ரிக்­கப்­பட்ட மர­ப­ணுக்கள் ஆய்­வுக்­காக ஜின்ரெக் நிறு­வ­னத்­திடம் ஒப்­ப­டைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்கள் இன்­னமும் அது குறித்த அறிக்கையை தமக்கு வழங்­க­வில்­லை­யெ­னவும் தெரி­வித்தார்.

இத­னை­ய­டுத்து குறித்த ஜின்ரெக் நிறு­வ­னத்தின் வித்­தி­யாவின் மர­பணு அறிக்­கைகள் தொடர்­பாக விசா­ர­ணை­களை மேற்­கொள்ளும் அதி­கா­ரியை அடுத்த வழக்கு தவ­ணை­யின்­போது மன்றில் முன்­னி­லை­யாக வேண்­டு­மெனத் தெரி­வித்­த­துடன் அவ்­வா­றில்­லாத பட்­சத்தில் அது தொடர்­பான கட்­ட­ளையை நீதி­மன்றம் பிறப்­பிக்கும் எனவும் நீதிவான் தெரி­வித்தார்.

மேலும் இக்­கொலை தொடர் பாக மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய சகல விசா­ரணை அறிக்கைகளையும் பூரணமாக மேற்கொண்டு மன்றில் அறிக்கை சமர்ப் பிக்கவேண்டுமெனவும் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு நீதிவான் உத்தரவிட்டதுடன் இவ்வழக்கு விசாரணையை எதிர்வரும் 4ஆம் திகதிக்கு ஒத்திவைத்ததுடன் இருவரது விளக்கமறியலையும் நீடித்திருந்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

முதலை கடித்து முதியவர் மரணம் ;...

2024-04-20 11:03:42
news-image

மரக்கறிகளின் விலை உயர்வு!

2024-04-20 11:00:02
news-image

நியூசிலாந்தின் வெலிங்டனில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தை நிறுவ...

2024-04-20 10:36:43
news-image

இராணுவ வீரர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !

2024-04-20 10:53:53
news-image

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயல்...

2024-04-20 10:56:36
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான சூத்திரதாரிகள்...

2024-04-20 10:34:03
news-image

நுவரெலியாவில் போதைப்பொருட்களுடன் வெளிநாட்டுப் பெண் உட்பட...

2024-04-20 10:43:33
news-image

சந்தேகத்துக்கிடமான முறையில் ஒருவர் உயிரிழப்பு: அம்பலாந்தோட்டையில்...

2024-04-20 10:56:00
news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

அமெரிக்காவில் நடைபெறவுள்ள திருமணமான அழகுராணிகளுக்கான போட்டியில்...

2024-04-20 11:14:06
news-image

ஐஸ் போதைப்பொருளுடன் பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

2024-04-20 10:57:09
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08