பஞ்சாப் அணிக்கு பதிலடி கொடுக்குமா ராஜஸ்தான் ?

Published By: Priyatharshan

16 Apr, 2019 | 02:50 PM
image

ஐ.பி.எல். 12 தொடரின் 31 ஆவது போட்டியில் கிங்ஸ்லெவன் பஞ்சாப் அணியை பதிலடி கொடுக்கும் நோக்குடன் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி எதிர்த்து விளையாடுகின்றது. 

இரு அணிகளுக்குமிடையிலான போட்டி இன்று இரவு 8 மணிக்கு மொஹாலியிலுள்ள பிந்ரா மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு ரவிச்சந்திரன் அஸ்வின் தலைமை தாங்கும் அதேவேளை, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கு ரஹானே தலைமை தாங்குகின்றார்.

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி 8 போட்டிகளில் விளையாடி 4 போட்டிகளில் வெற்றியையும் 4 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்து 8 புள்ளிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் 5 ஆவது இடத்திலுள்ளது.

பஞ்சாப் அணி தனது கடைசி 2 லீக் போட்டிகளிலும் முறையே மும்பை, பெங்களூரு அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்தது.

மும்பை அணிக்கு எதிரான லீக் போட்டியில் லோகேஷ் ராகுல் ஆட்டம் இழக்காமல் 100  ஓட்டங்களையும் கிறிஸ் கெய்ல் 63 ஓட்டங்களையம் அடித்ததால் பஞ்சாப் அணி 197 ஓட்டங்களை குவித்தது. 

இதேபோல் பெங்களூருக்கு எதிரான ஆட்டத்தில் கெய்ல் ஆட்டம் இழக்காமல் 99 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்ததால் பஞ்சாப் அணி 173 ஓட்டங்களை எடுத்தது. 

இரு ஆட்டங்களிலும் வலுவான ஓட்ட எண்ணிக்கையை எடுத்தாலும் பஞ்சாப் அணியின் முன்னணி பந்து வீச்சாளர்களின் நிலையற்ற பந்து வீச்சால் அந்த அணி ஓட்டங்களை எதிரணிக்கு விட்டுக்கொடுத்து தோல்வியைத் தழுவ நேர்ந்தது. எனவே தனது பந்து வீச்சில் உள்ள குறைபாடுகளை பஞ்சாப் அணி சரி செய்ய வேண்டியது அவசியமானதாகும்.

இதேவேளை, ராஜஸ்தான் ரோயல்ஸ் அணி 7 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் வெற்றிபெற்றுள்ளதுடன்  5 போட்டிகளில் தோல்வியடைந்து 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7 ஆவது இடத்திலுள்ளது.

மும்பை அணிக்கு எதிரான முந்தைய லீக் போட்டியில், ராஜஸ்தான் அணி 188 ஓட்டங்கள் என்ற  இலக்கை எட்டிப் பிடித்து அசத்தல் வெற்றி பெற்றது அந்த அணிக்கு புத்துணர்ச்சியை அளித்து இருக்கும். 

அந்த ஆட்டத்தில் ஜோஸ் பட்லர் 89 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார். 

ரஹானே, சஞ்சு சாம்சன் ஆகியோரும் அணியின் வெற்றிக்கு கைகொடுத்தனர். காயம் காரணமாக கடந்த ஆட்டத்தில் ஆடாத பென் ஸ்டோக்ஸ் இன்றைய ஆட்டத்தில் அணிக்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர் வருகை ராஜஸ்தான் அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கும்.

பஞ்சாப் அணிக்கு எதிரான தொடக்க லீக் போட்டியில் 14 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி தோல்வி கண்டது. அந்த தோல்விக்கு பதிலடி கொடுக்க ராஜஸ்தான் அணி தீவிரம் காட்டும். அதேநேரத்தில் வெற்றி பாதைக்கு திரும்ப பஞ்சாப் அணி தனது முழுப் பலத்தையும் வெளிப்படுத்தும். எனவே இந்த ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சாதனைகள் குவித்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத்திடம் பணிந்தது...

2024-04-15 23:55:33
news-image

நேபாள கிரிக்கெட் வீரர் திப்பேந்த்ரா சிங்;...

2024-04-15 18:45:05
news-image

பாரிஸ் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டிகளில் தங்கம்...

2024-04-15 16:59:59
news-image

இத்தாலி மெய்வல்லுநர் போட்டியில் யுப்புன் அபேகோனுக்கு...

2024-04-15 16:16:50
news-image

பாரிஸ் 2024 ஒலிம்பிக் டென்னிஸில் பங்குபற்றி...

2024-04-15 13:06:04
news-image

மதீஷவின் பந்துவீச்சில் மண்டியிட்டது மும்பை : ...

2024-04-15 13:24:55
news-image

ரி20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை முன்னோடி...

2024-04-14 22:18:48
news-image

பில் சோல்ட், மிச்செல் ஸ்டாக் பிரகாசிக்க,...

2024-04-14 19:59:07
news-image

வுல்வாட் அபார சதம் : இலங்கையை...

2024-04-14 09:35:43
news-image

கடைசி 2 ஓவர்களில் ஹெட்மயரின் அதிரடியால்...

2024-04-13 23:48:46
news-image

இலங்கையில் ICC கிரிக்கெட் உரிமைகள் 2025...

2024-04-13 07:06:22
news-image

டெல்ஹியுடனான போட்டியில் லக்னோவுக்கு சொந்த மண்ணில்...

2024-04-13 07:02:37