புத்தாண்டு மோதல்களில் நாடளாவிய ரீதியில் 6 பேர் உயிரிழப்பு

Published By: R. Kalaichelvan

16 Apr, 2019 | 02:10 PM
image

(ஆர்.விதுஷா)

கடந்த 48 மணிநேரங்களுக்குள் இடம் பெற்ற மோதல்களின் காரணமாக 06 பேர் உயிரிழந்துள்ளனர்.

சம்பவங்களுடன் தொடர்புடைய 11 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கடந்த 14 ஆம் திகதி முற்பகல் 06 மணிக்கும் இன்று  காலை 06 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்த மோதல் சம்பவங்கள் இடம் பெற்றுள்ளதாக பொலிஸ் தலைமையகம் சுட்டிக்காட்டியுள்ளது.

இபலோகம , ஹ{ங்கம , நொச்சியாகம , குலியாப்பிட்டிய , மஹஓயா மற்றும் கொலொன்ன ஆகிய பகுதிகளிலேயே இந்த மோதல் சம்பவங்கள் இடம் பெற்று 6 உயிரிழந்துள்னனர்.

அதற்கமைய , இபலோகம - சேவனபுர பகுதியில் இரு தரப்பினர்களுக்கு இடையில் இடம் பெற்ற மோதலின் போது பொல்லால் தாக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அத்துடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் அநுராதபுரம் வைத்தியசாலையிரல் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொலை சம்பவம் நேற்று பிற்பகல் 3.30 ற்கும் 4.20 மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் இடம் பெற்றுள்ளது. பணகொடுக்கல் வாங்கல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடே கொலைக்கு காரணம் என பொலிசார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 54 வயதுடைய வெல்லவ பகுதியை சேர்ந்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அத்துடன், கொலை சம்பவம் தொடர்பில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதே வேளை , இசை நிகழ்ச்சியினை பார்வையிட சென்ற இருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்தவர்கள் பொல்லால் தாக்கியுள்ளனர்.

 இதன்போது படுகாயமடைந்த 17 வயதுடைய உல்லிதுவாவ பகுதியை சேர்ந்த இளைஞன் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைபலனின்றி உயிரிழந்துள்ளார்.

கொலொன்ன - கஸ்தானகஹவத்த பகுதியில்நேற்று பிற்பகல் 5.30 இற்கும் 6மணிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியிலேயே இந்த கொலை சம்பவம் இடம் பெற்றுள்ளது.

 கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் அடையாளம் காணப்படாத நிலையில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ஹங்கம - லூனம பகுதியில் இருவருக்கு இடையில் இடம் பெற்ற கருத்து முரண்பாடு கைகலப்பாக மாறியதையடுத்து கூரிய ஆயுதத்தினால் தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த கொலை சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணியளவில்இடம் பெற்றுள்ளது. 

இதன் போது 27 வயதுடைய மாமடல பகுதியை சேர்ந்த  நபர் உயிரிழந்துள்ளார் .

அத்துடன், கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரொருவரை பொலிசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் ,நொச்சியாகம பகுதியில் 38 வயதுடைய சேர்ந்த நபர் பொல்லால் தாக்கப்பட்டுள்ள நிலையில் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 6.45 மணியளவில் இடம் பெற்றுள்ளது .

இருவருக்கிடையில் இடம் பெற்ற கருத்து முரண்பாட்டின் காரணமாகவே குறித்த நபர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

கொலை சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் தலைமறைவாகியுள்ள நிலையில் பொலிசார் சந்தேக நபரை கைது செய்யும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் , மஹஓயா பகுதியில் இரு குழுக்களுக்கு இடையில் இடம் பெற்ற முரண்பாட்டின் காரணமாக பொல்லால் தாக்கப்பட்ட நிலையில் 41 வயதுடைய மஹஓயா பகுதியை சேர்ந்தவர்  உயிரிழந்துள்ளார்.

மஹஓயா பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இரவு 11மணியளவிலேயே இந்த மோதல் சம்பவம் இடம் பெற்றுள்ளது. அத்துடன், சம்பவம் தொடர்பில் பெண்கள் மூவர் உள்ளடங்கலாக 06 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும்,குலியாப்பிட்டிய - பெமினிகல்ல பகுதியில் இரும்பு பொல்லால் தாக்கப்பட்ட நிலையில் நபரொருவர் உயிரிழந்துள்ளார். 

இக் கொலை சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு 7.15 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

கருத்து முரண்பாட்டின் காரணமாக ஏற்பட்ட கைகலப்பில் இந்த கொலை இடம் பெற்றுள்ளது.

இதன் போது 55 வயதுடைய அமரவங்ஷ என்பவர் நபர் சிகிச்சைப்பலனின்றி உயிரிழந்துள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51