புலிகளும் ஆயுதங்களை ஒப்படைக்கலாம் : பாதுகாப்பு செயலாளர் கூறுகிறார்.!

Published By: Robert

21 Apr, 2016 | 08:44 AM
image

சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை அர­சாங்­கத்­திடம் 2016 ஏப்ரல் 25ஆம் திகதி முதல் 2016 மே 6ஆம் திகதி வரையில் ஒப்­ப­டைக்­க­லாம் என தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது. குறித்த கால­கட்­ட­த்தினுள் தம்­மி­ட­முள்ள சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைக்கும் நபர்­க­ளுக்கு தண்­ட­னையோ அல்­லது தண்­டமோ கிடை­யாது மாறாக தகுந்த சன்­மானம் வழங்­கப்­ப­டு­ம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

விடு­தலைப் புலி­களின் உறுப்­பி­னர்கள் எவ­ரேனும் சட்­ட­வி­ரோ­த­மாக ஆயு­தங்­களை வைத்­தி­ருந்தால் குறித்த காலத்­தினுள் ஆயு­தங்­களை ஒப்­ப­டைத்தால் அவர்களுக்கும் பொது மன்­னிப்பு வழங்­கப்­படும். குறித்த காலத்தின் பின்னர் தேடு­தலின் போது அவ்­வாறு ஆயு­தங்­களை கண்­டெ­டுக்கும் பட்­சத்தில் கடு­மை­யான தண்­ட­னைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­வார்கள் எனவும் குறிப்­பிடப்பட்டுள்ளது.

பாது­காப்பு ஊடக மையத்தில் நேற்று நடை­பெற்ற விசேட செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே பாது­காப்பு செய­லாளர் கரு­ணா­சேன ஹெட்­டி­யா­ராச்சி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில், துப்­பாக்கி கட்­டளைச் சட்­டத்தின் 30ஆவது வாச­கத்தின் சட்ட ஒழுங்­குகள் அடிப்­ப­டையில் இலக்கம் 1958/06 மற்றும் 2016.03.05 திகதி அதி விசேட வர்த்­த­மானி அறி­வித்­தலின் பிர­காரம் சட்­ட­வி­ரோத துப்­பா­க்கி­களை அர­சாங்­கத்­திடம் கைய­ளிப்­ப­தற்­கான பொது மன்­னிப்புக் காலம் அறி­விக்­கப்­பட்­டுள்­ளது. இதன் அடிப்­ப­டையில் 2016 ஏப்ரல் 25ஆம் திகதி முதல் 2016 மே 06ஆம் திகதி வரையில் வேலை நாட்­களில் அலு­வ­லக நேரங்­களில் குறித்த நபர்கள் அல்­லது ஆயு­தங்கள் இருக்கும் பிர­தே­சங்­களின் அண்­மையில் அமைந்­துள்ள மாவட்ட செய­லாளர் அலு­வ­லகம், பிர­தேச செய­லக அலு­வ­லகம், அல்­லது பொலிஸ் நிலை­யத்தில் உரிய ஆயு­தங்­களை ஒப்­ப­டைக்க முடியும்.

அதேபோல் இந்த குறித்த கால­கட்­ட­தினுள் தம்­மி­ட­முள்ள சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைக்கும் நபர்­க­ளுக்கு குறித்த கால­கட்­டத்­தினுள் துப்­பாக்கி கட்­டளைச் சட்­டத்தின் ஒழுங்­குகள் அடிப்­படையில் குறித்த குற்­றத்­திற்­கான தண்டம் அல்­லது தண்­ட­னைக்கு உட்­ப­டுத்­தப்­பட மாட்­டார்கள்.

அதேபோல் அவ்­வாறு ஒப்­ப­டைக்கும் நபர்­க­ளுக்கு உரிய சன்­மானம் வழங்­கப்­படும். குறிப்­பாக சன்னத் துப்­பாக்கி அல்­லது அதற்கு சம­மான தீ ஆயு­தங்­க­ளுக்­காக (கல் கட்டஸ்/ கட்டுத் துப்­பாக்கி) 5000 ரூபாவும், பிஸ்டல்/ ரிவால்­வ­ருக்கு 10,000 ரூபாவும், ரி 56 வகை­யி­லான தீ ஆயு­தத்­திற்­காக 25,000 ரூபா பணமும் வழங்­கப்­படும்.

மேலும் குறித்த காலத்­தினுள் பொது மன்­னிப்பு வழங்­கு­வ­தைப்­போ­லவே நிர்­ண­யிக்­கப்­பட்ட கால எல்லை முடி­வ­டைந்த பின்னர் மீண்டும் பாரிய தேடுதல் நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­படும். அவ்­வாறு தேடு­தலின் போது எவ­ரிடம் இருந்­தேனும் சட்­ட­வி­ரோத ஆயு­தங்கள் கண்­டெ­டுக்­கப்­ப­டு­மாயின் அந்த நபர்­க­ளுக்கு எதி­ராக மிகக் கடு­மை­யான தண்­டனை வழங்­கப்­படும். நாட்டின் தேசிய பாது­காப்பு விட­யங்­களை உரிய வகையில் கையாள்­வதே எமக்கு வழங்­கப்­பட்­டி­ருக்கும் பொறுப்­பாகும். அந்த பொறுப்பை நாம் மிகச் சரி­யாக மேற்­கொண்டு வரு­கின்றோம். ஆகவே தேசிய பாது­காப்பை சீர­ழிக்கும் எந்­த­வித நட­வ­டிக்­கை­க­ளுக்கும் நாம் இட­ம­ளிக்க மாட்டோம்.

இப்­போ­தி­ருக்கும் சூழலில் எவ­ருக்கும் தனிப்­பட்ட ஆயு­தங்­களை வைத்­தி­ருக்க வேண்­டிய தேவை இல்லை என நம்­பு­கின்றோம். நாட்டில் பாரிய அச்­சு­றுத்தல் நிலை­மைகள் இல்லை. அவ்­வாறு இருக்­கையில் தனிப்­பட்ட ஆயு­தங்­களை அல்­லது சட்­ட­வி­ரோத ஆயு­தங்­களை அர­சாங்­கத்­திடம் ஒப்­ப­டைப்­பதே சரி­யா­ன­தாகும். அதையும் மீறி எவ­ருக்கும் அச்­சு­றுத்­தல்கள் அல்­லது பாது­காப்பு சிக்­கல்கள் இருக்­கு­மாயின் அவர்­க­ளுக்கு தனிப்­பட்ட ஆயுதம் தேவைப்­ப­டு­மாயின் உரிய முறையில் பாது­காப்பு தரப்­பிடம் தெரி­வித்து அதற்­கான நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ள முடியும். அவ்­வாறு எம்­மிடம் தெரி­விக்கும் பட்­சத்தில் குறித்த கார­ணி­களை பரி­சீ­லனை செய்து அவர்­க­ளுக்கு ஆயுதம் வழங்­கு­வது தொடர்பில் தீர்­மானம் எடுக்­கப்­படும். அதற்கும் பாது­காப்பு அமைச்சில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் விடு­த­லைப்­பு­லி­களின் ஆயு­தங்கள் இன்னும் பல பிர­தே­சங்­களில் கண்­டெ­டுக்­கப்­ப­டு­வ­தா­கவும், ஒரு சிலர் இன்றும் ஆயு­தங்­களை வைத்­தி­ருப்­ப­தா­கவும் பல தரப்பில் இருந்து குற்­றச்­சாட்­டுகள் முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. அதேபோல் சர்­வ­தேச நாடு­களில் இருந்து சட்­ட­வி­ரோத ஆயு­தங்கள் இர­க­சி­ய­மாக நாட்­டுக்குள் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தா­கவும் கூறப்­ப­டு­கின்­றது. இவை சாதா­ர­ண­மான விட­யங்களாக இல்­லா­விட்­டாலும் பல நாடு­களில் இவ்­வாறு நடை­பெ­று­கின்­றது.

ஆகவே அவற்றை தடுக்க பாது­காப்பு தரப்பு கடு­மை­யாக சோத­னை­களை மேற்­கொண்டு வரு­கின்­றது.

விடு­தலைப் புலி­களின் புனர்­வாழ்வு வழங்­கப்­பட்­டுள்ள நபர்­க­ளாக இருந்­தாலும் அல்­லது வெளி­நா­டு­களில் இருந்து வந்­த­வர்­க­ளாக இருந்­தாலும் அவர்­க­ளிடம் ஆயு­தங்கள் இருக்­கு­மாயின் அவற்­றையும் உரிய காலத்­தினுள் ஒப்­ப­டைக்க முடியும். விடு­தலைப் புலி­களின் உறுப்­பி­னர்கள் என்றோ அல்­லது தண்­டனை அதி­க­மாக வழங்­கப்­படும் என்றோ அஞ்­ச­வேண்டாம். குறித்த காலத்­தினுள் ஆயு­தங்­களை ஒப்­ப­டைத்தால் விடு­தலைப் புலி­க­ளுக்கும் பொது மன்­னிப்பு வழங்­கப்­படும். குறித்த காலத்தின் பின்னர் தேடுதலின் போது அவ்வாறு ஆயுதங்களை கண்டெடுக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவார்கள்.

எவ்வாறு இருப்பினும் இன்றுவரை பாதுகாப்பு தரப்பின் கட்டுப்பாட்டினுள் அல்லாத 900 ஆயுதங்கள் அளவில் சட்டவிரோதமாக இருப்பதாகவே தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும் அவற்றில் 600 தொடக்கம் 700 வரையிலான ஆயுதங்களை நாம் பறிமுதல் செய்துள்ளோம். எஞ்சியுள்ள 200 தொடக்கம் 300 வரையிலான ஆயுதங்களே பறிமுதல் செய்யவேண்டியுள்ளது. அதற்காகவே இந்த கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19